PIB Headquarters
ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள், இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் பாரம்பரியம் மற்றும் பொருளாதாரத்திற்கு வலுசேர்க்கிறது
Posted On:
01 OCT 2025 12:01PM by PIB Chennai
அண்மையில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஜிஎஸ்டி சீர்திருத்த நடவடிக்கைகள் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் துறைகளில் பல்வேறு நன்மைகளுடன் வரிச் சுமைகளைக் குறைத்துள்ளன. வளமான பாரம்பரிய கைவினைப்பொருட்கள், தனித்துவமான வேளாண் விளை பொருட்கள் மற்றும் வளர்ந்து வரும் தொழில்துறைக்குப் பெயர் பெற்ற இமாச்சலப் பிரதேச மாநிலத்தில், அண்மையில் ஜிஎஸ்டி விகிதக் குறைப்புக்கள் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவை சிறு கைவினைஞர்கள் மற்றும் நெசவாளர்களுக்கு நிவாரணம் அளிப்பதுடன், விவசாயிகள் மற்றும் வேளாண் துறையில் புதிய வாய்ப்புகளுக்கும், இம்மாநிலத்தில் உள்ள தொழில்துறை தொகுதிகளுக்கு இடையே அதிக போட்டித்தன்மையை உருவாக்கவும் வகை செய்கிறது. இந்த சீர்திருத்த நடவடிக்கைகள் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவதுடன், நீடித்த வளர்ச்சிக்கும் வித்திடும்.
இமாச்சலப் பிரசேச மாநிலத்தின் புகழ்பெற்ற கைத்தறி பொருட்கள், குறிப்பாக, சால்வைகள் மற்றும் கம்பளி ஜவுளிகள், புதிய ஜிஎஸ்டி கட்டமைப்பின் கீழ் நிவாரணம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தயாரிப்புகள் நினைவுப் பொருட்களாக மட்டுமின்றி, அவை ஆயிரக்கணக்கான கைவினைக் கலைஞர்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளது.
குலு பள்ளத்தாக்குப் பகுதியில், சுய உதவிக் குழுக்களில் உள்ள 3,000-ம் அதிக எண்ணிக்கையிலான நெசவாளர்கள் புவிசார் குறியீட்டுடன் கூடிய குலு சால்வைகளை உற்பத்தி செய்கின்றனர். இந்த நெசவாளர்கள் மாநிலம் முழுவதிலும் உள்ள 10,000 முதல் 12,000 கைத்தறி கைவினைஞர்களில் ஒரு அங்கமாக உள்ளனர். அவர்கள் இந்த கைவினைப் பொருட்களை தயாரித்து தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொண்டு வருகின்றனர். அண்டை மாவட்டமான கின்னார் மாவட்டத்தின் சால்வைகள், புராணக் கதைகளால் அலங்கரிக்கப்பட்டு, பல ஆயிரம் கைவினைஞர்களால் நெய்யப்பட்டு கைகளால் அவற்றிற்கு சாயமிடப்படுகின்றன. ஜிஎஸ்டி விகிதம் 12% - லிருந்து 5% - மாகக் குறைக்கப்பட்டதால், இந்த பொருட்களின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கை கைவினைஞர்களின் போட்டித்தன்மை மற்றும் வருவாய் அதிகரிப்பிற்கு நேரடி ஆதரவு அளிக்கிறது.
பஷ்மினா சால்வைகளுக்கான ஜிஎஸ்டி விகிதம் 12% - லிருந்து 5% - மாக குறைக்கப்பட்டுள்ளதால் பயனடைகின்றன. இவை பெரும்பாலும் காஷ்மீருடன் தொடர்புடையதாக இருந்தாலும், இமாச்சல பிரதேச மாநிலத்தின் லாஹவுல்-ஸ்பிட்டி, கின்னார், குலு, மண்டி மற்றும் சிம்லா போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கைத்தறித் துறையில் உள்ள 10,000-12,000 கைவினைஞர்களில் பலர் பஷ்மினா சால்வைகளைத் தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளனர். இந்த வரி குறைப்பு உயர் மதிப்புடைய சால்வைகளுக்கும் நிவாரணம் அளிக்கிறது, கைவினைஞர்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் சால்வைகளை மிகவும் போட்டித்தன்மையுடன் விலை நிர்ணயம் செய்ய உதவிடுவதுடன், லாபத்தையும் பராமரிக்கிறது.
சால்வைகளுடன், பாரம்பரிய ஹிமாச்சல மாநிலத் தொப்பிகள், பல்வேறு வண்ணங்களிலான கின்னாரி தொப்பிகள் மற்றும் கையுறைகள் போன்ற பிற கம்பளி பொருட்களின் திருத்தப்பட்ட ஜிஎஸ்டி அடுக்கு மூலம் பயனடைகின்றன. இந்த பொருட்கள் உயரமான பகுதிகளில் அமைந்துள்ள மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான கைவினைஞர்களால் கைகளால் பின்னப்படுகின்றன. குறைந்த வரி விகிதம் வாடிக்கையாளர்களுக்கான விலைகளை மிதமாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கைவினைஞர்கள் மற்றும் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதுடன் தலைமுறை தலைமுறையாக பழமையான கைவினைப் பொருட்களைப் பாதுகாக்க உதவிடும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.inPressReleasePage.aspxPRID=2173492
(Release ID: 2173492)
******
SS/SV/SH
(Release ID: 2174116)
Visitor Counter : 6