புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வருடாந்திர தொழில்துறை கணக்கெடுப்பு குறித்த அறிக்கை வெளியீடு

Posted On: 30 SEP 2025 4:01PM by PIB Chennai

பல்வேறு வகையான உற்பத்தி ஆலைகளின் கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களை பயனுள்ள வகையில் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு வருடாந்திர தொழில்துறை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.  உற்பத்தி மதிப்புக்கூட்டு நடவடிக்கைகள், வேலைவாய்ப்பு, மூலதன கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அளவீடுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்தக் கணக்கெடுப்பு தேசிய மற்றும் மாநில அளவிலான புள்ளியியல் தொடர்பான  மதிப்பு வாய்ந்த தகவல்களை வழங்குகிறது. மாநில மற்றும் முக்கிய தொழில்துறைகளின் நிலைகள் குறித்த முடிவுகளும் இந்த தரவுகளை கொண்டு தயாரிக்கப்படுகிறது.

மத்திய புள்ளியியல் மற்றும் அமலாக்கத்துறை 2023-24-ம் நிதியாண்டிற்கான வருடாந்திர தொழில்துறை கணக்கெடுப்பு குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த கணக்கெடுப்பு தொடர்பான முழு விவரங்களும் அந்த அமைச்சகத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 

தொழில்துறை செயல்பாடுகள் குறித்த வருடாந்திர கணக்கெடுப்பு தொடர்பான விரிவான அறிக்கைகள் இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2173136     

***

SS/SV/RJ/SH


(Release ID: 2173309) Visitor Counter : 8
Read this release in: Urdu , English , Hindi