PIB Headquarters
ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் வளர்ச்சிக்கும், போட்டித்தன்மைக்கும் ஜிஎஸ்டி சீர்திருத்த நடவடிக்கைகள் உத்வேகம் அளிக்கிறது
Posted On:
30 SEP 2025 1:36PM by PIB Chennai
விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகம் மற்றும் வாகன உற்பத்திக்கான மையமாக திகழும் அனந்தபூர், சித்தூர் முதல் காஃபி பயிரடப்படும் அரக்கு பள்ளத்தாக்கு வரை, கொண்டப்பள்ளி மற்றும் எட்டிக்காபக்கா கைவினை பொருட்களுக்கான உற்பத்தி தொகுதி வரை ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் பொருளதார வளர்ச்சி பாரம்பரிய கால்நடை வளர்ப்பு மற்றும் நவீன தொழில்துறை என அனைத்தும் கலந்த தனித்துவ வளர்ச்சியை பிரதிபலிக்கிறது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஜிஎஸ்டி சீர்திருத்த நடவடிக்கைகள் விரிவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறைவான வரி விகிதங்கள் வாடிக்கையாளர்களுக்கு செலவுகளை குறைப்பதுடன், எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு செலவுகளுக்கான மூலதன தொகையைப் பெறுவதிலும் ஏற்றுமதியில் போட்டித் தன்மையுடன் கூடிய சந்தை விரிவாக்கத்திற்கும் உதவுகிறது. மீன்பிடித்துறை பால்வளம், வாகன உற்பத்தி, மருந்துகள், மருத்துவ சாதனங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கைவினைப் பொருட்கள் மற்றும் அன்றாட உபயோகப் பொருட்கள் ஆகியவற்றில் ஜிஎஸ்டி சீர்திருத்த நடவடிக்கைகளின் தாக்கங்களை கண்கூடாக காண முடிகிறது.
கடந்த 2022-23-ம் ஆண்டில் நாட்டின் மீன் உற்பத்தியில் ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் பங்களிப்பு 41 சதவீதமாக உள்ளது. கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, குண்டூர், கிருஷ்ணா, நெல்லூர், பிரகாசம், ஸ்ரீகாகுளம், விசாகப்பட்டினம், விஜயநகரம் உள்ளிட்ட 9 கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த 14.5 லட்சம் மக்கள் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2173026
***
SS/SV/SH
(Release ID: 2173264)
Visitor Counter : 4