சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
“என் முன்மாதிரிக்கு கடிதம்” என்ற தலைப்பில் தேசிய அளவிலான கடிதம் எழுதுதல் போட்டியை அஞ்சல்துறை நடத்துகிறது
Posted On:
30 SEP 2025 5:48PM by PIB Chennai
“என் முன்மாதிரிக்கு கடிதம்” என்ற தலைப்பில் தேசிய அளவிலான கடிதம் எழுதுதல் போட்டியை அஞ்சல்துறை நடத்துகிறது. உள்நாட்டு (இன்லேண்ட்) கடிதம், அஞ்சல் உறை ஆகிய இரண்டு வகைகளில் கடிதம் எழுதுதல் போட்டி நடைபெறுகிறது. கையால் மட்டுமே எழுதப்பட வேண்டிய இக்கடிதங்கள் ஏ-4 அளவு தாளில் 1000 வார்த்தைகளுக்கு மிகாமலும், உள்நாட்டு (இன்லேண்ட்) கடிதத்தில் 500 வார்த்தைகளுக்கு மிகாமலும் இடம் பெற வேண்டும். வெற்றி பெற்றவர்களுக்கு தேசிய அளவிலும், வட்ட அளவிலும் பரிசு வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் இரண்டு வகைப்பிரிவிலான கடிதத்துக்கும் பரிசுத் தொகை வழங்கப்படும். தேசிய அளவில் முதல் பரிசாக ரூ.50,000-மும், இரண்டாவது பரிசாக ரூ.25,000-மும், மூன்றாவது பரிசாக ரூ.10,000-மும் அளிக்கப்படும்.
வட்ட அளவில் முதல் பரிசாக ரூ.25,000-மும், இரண்டாவது பரிசாக ரூ.10,000-மும், மூன்றாவது பரிசாக ரூ. 5,000-மும் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்பவர்கள் 01.01.2025-ன்படி 18 வயதுக்கு உட்பட்டவர்கள் அல்லது 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதற்கான சான்றிதழை அளிக்க வேண்டும். இக்கடிதங்கள் ஆங்கிலம் அல்லது இந்தி அல்லது தமிழில் எழுதப்படலாம். இக்கடிதத்தை அஞ்சல்துறை தலைவர், தமிழ்நாடு வட்டம், சென்னை 600 002 என்ற முகவரிக்கு 8.12.2025-க்குள் அனுப்ப வேண்டும்.
***
SS/IR/AG/SH
(Release ID: 2173258)
Visitor Counter : 8