தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்த வெளிப்படையான நடைமுறைகளை ட்ராய் பரிந்துரை செய்துள்ளது
प्रविष्टि तिथि:
30 SEP 2025 1:17PM by PIB Chennai
தொலைத்தொடர்பு அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யும் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் பல்வேறு பரிந்துரைகளை மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் தொலைத்தொடர்பு துறையின் கீழ் இயங்கும், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) இன்று வெளியிட்டுள்ளது.
முன்னதாக, தொலைத்தொடர்புத்துறை 13.07.2017 அன்று வெளியிடப்பட்ட பரிந்துரைகளின் படி ட்ராய் சட்டம் 1997-ல் பிரிவு 11 (1) (ஏ)-ன்படி பொதுவான மொபைல், ரேடியோ, அலைவரிசை, சேவைகள் உட்பட அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வதற்கான நடைமுறைகளின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பல்வேறு தரப்பினருடன் விரிவான ஆலோசனை கொண்ட பிறகு ட்ராய் தனது பரிந்துரைகளை 20.07.2018 அன்று வெளியிட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2173015
***
SS/SV/RJ
(रिलीज़ आईडी: 2173233)
आगंतुक पटल : 22