ஜவுளித்துறை அமைச்சகம்
ஜவுளி அமைச்சகம் சார்பில் தூய்மைப்பணிகள் நடைபெற்றது
Posted On:
30 SEP 2025 12:22PM by PIB Chennai
மத்திய ஜவுளி அமைச்சகம் சார்பில் புதுதில்லியில் தூய்மைப்பணிகள் நடைபெற்றது. புதுதில்லி உத்யோக் பவனில் 29.09.2025 அன்று சுவரொட்டி தயாரிப்புப் போட்டியை அமைச்சகம் நடத்தியது. தூய்மையே சேவை 2025 இயக்கத்தின் கீழ் அமைச்சகத்தின் பிரிவைச் சேர்ந்த உயரதிகாரிகள் பல்வேறு பகுதிகளில் தூய்மைப்பணியை ஆய்வு செய்து ஊழியர்கள் தூய்மை நடைமுறைகளை பின்பற்ற ஊக்குவித்தனர்.
நாடு முழுவதும் இந்திய சணல் கழகம் சார்பில் அன்னையின் பெயரில் ஒரு மரக்கன்று இயக்கத்தின் கீழ் 500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. தேசிய ஆடை அலங்கார தொழில்நுட்ப நிறுவனம் தங்கள் வளாகங்களில் தேவையற்ற கோப்புகளை களையும் பணியை மேற்கொண்டது. கொல்கத்தா நியூடவுன் பகுதியில் தேசிய சணல் வாரியம் சார்பில் முகக்கவசம் மற்றும் சணல் பைகள் விநியோகிக்கப்பட்டது. மொத்தம் 250-க்கும் மேற்பட்ட சணலால் தயாரிக்கப்பட்ட முகக்கவசங்களும், 300-க்கும் மேற்பட்ட சணல் பைகளும் விநியோகிக்கப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2172983
***
SS/IR/AG/RJ
(Release ID: 2173137)
Visitor Counter : 7