பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
நிர்வாகத்தில் தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சி அளிக்க வேண்டும்- மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
प्रविष्टि तिथि:
29 SEP 2025 5:03PM by PIB Chennai
புதுதில்லியில் இந்திய பொது நிர்வாக நிறுவனத்தின் 327 வது நிர்வாகக்குழு கூட்டத்திற்கு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமை வகித்தார்.
இந்த நிர்வாகக் குழுவின் தலைவரான டாக்டர் ஜிதேந்திர சிங், செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தளங்கள், தரவு சார்ந்த கூறுகள் போன்ற வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களுடன் நிர்வாகப் பயிற்சியின் வலுவான ஒருங்கிணைப்பிற்கான அவசியம் குறித்து வலியுறுத்தினார்.
இந்தியாவின் அதிக அளவிலான அறிவியல் சார்ந்த திறமைகள் உள்ளதாக குறிப்பிட்ட டாக்டர் ஜிதேந்திர சிங், தலைமைப் பொறுப்பை வகிப்பவர்களுக்கு நிறுவன மேலாண்மை மற்றும் நிர்வாகம் சார்ந்த கட்டமைக்கப்பட்ட பயிற்சி தேவை என்று கூறினார். நிர்வாகத்தில் வளர்ந்து வரும் சமூக ஊடகங்களின் பங்களிப்பு குறித்து உரையாற்றிய அமைச்சர், அதை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
சமூக ஊடகங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், எவ்வாறு பயன்படுத்தக் கூடாது என்பது குறித்த பயிலரங்கு நடத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். தவறான தகவல்களின் விளைவுகள் குறித்து குறிப்பிட்ட அவர், நம்பகத்தன்மை மிக்க பொது தகவல்களின் அவசியங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2172758
***
SS/IR/LDN/SH
(रिलीज़ आईडी: 2172861)
आगंतुक पटल : 19