PIB Headquarters
உலக அளவில் பால் உற்பத்தியில் இந்தியா தொடர்நது முதலிடம் வகிக்கிறது
Posted On:
29 SEP 2025 10:59AM by PIB Chennai
உலக அளவில் பால் உற்பத்தியில் இந்தியா தொடர்ந்து முதலிடம் வகித்து, உலகளாவிய விநியோகத்தில் சுமார் கால் பங்கு பங்களிப்பை அளிக்கிறது. தற்போது இந்தியாவில் பால் உற்பத்தி மிகப்பெரிய வேளாண் உற்பத்தியாகவும், நாட்டின் பொருளாதாரத்திற்கு 5 சதவீத பங்களிப்பையும் அளிக்கிறது. 8 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு நேரடி வேலைவாய்ப்பை வழங்குகிறது.
பால் உற்பத்தி 10 ஆண்டுகளில் 63.56 சதவீதம் அதிகரித்து, 146.3 மில்லியன் டன்னில் இருந்து 239.30 மில்லியன் டன்னாக அதிகரித்து உள்ளது. ஒரு நபருக்கான பால் விநியோகம் 48 சதவீதம் அதிகரித்து, 2023 – 24-ம் ஆண்டில் நாள் ஒன்றுக்கு 471 கிராமிற்கு அதிகமாக இருந்தது. இது உலக சராசரியில் நாள் ஒன்றுக்கு 322 கிராமாகும். 2024 – 25-ம் ஆண்டில் நாடு முழுவதும் மொத்தம் 565.55 லட்சம் செயற்கை கருவூட்டல் நடைபெற்றது.
பால் என்பது ஊட்டச்சத்து பாதுகாப்பின் மையமாக திகழ்கிறது. தரமான புரதச் சத்தையும், அத்தியாவசிய ஊட்டச்சத்துகளையும் அளிக்கிறது. இது சுமார் முழு உணவாக கருதப்பட்டு, புரதங்கள், வைட்டமின்கள் ஆகியவற்றை அளிக்கிறது. ஆரோக்கியமான வளர்ச்சியில் பால் முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக குழந்தைப் பருவத்திற்கு இது அவசியத் தேவையாகும்.
இந்தியாவில் கூட்டுறவு பால்வளத்துறை விரிவானதாகவும், சிறந்த அமைப்பை உடையதாகவும் உள்ளது. 2025-ம் ஆண்டில் 22 பால்வள கூட்டமைப்புகளும், 241 மாவட்ட கூட்டுறவு யூனியன்களும், 28 பால்வள சந்தைகளும், 25 பால் உற்பத்தியாளர் சங்கங்களும் உள்ளன.
2.35 லட்சம் கிராமங்களில், 1.72 கோடி பால் விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். பால் பண்ணை ஊழியர்களில் சுமார் 70 சதவீதம் பேரும், பால் கூட்டுறவுகளில் 35 சதவீதம் பேரும் பெண்களாகவும் உள்ளனர். நாடு முழுவதும் கிராம அளவில் 48 ஆயிரத்திற்கும் அதிகமான பெண்களை தலைமையாக கொண்ட பால் கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2172546
***
SS/IR/LDN/SH
(Release ID: 2172851)
Visitor Counter : 15