ரெயில்வே அமைச்சகம்
                
                
                
                
                
                    
                    
                        பீகாரில் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகள் ரயில்வே செயல்பாட்டில் உள்ளது: திரு அஸ்வினி வைஷ்ணவ் 
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                29 SEP 2025 2:32PM by PIB Chennai
                
                
                
                
                
                
                பீகாரில் 3 அம்ரித் பாரத் விரைவு ரயில்கள் உட்பட மொத்தம் 7 புதிய ரயில் சேவைகளை மத்திய ரயில்வே துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், அம்மாநில துணை முதலமைச்சர் திரு சாம்ராட் சவுத்ரியுடன் இணைந்து தொடங்கி வைத்தார். இந்தப் புதிய ரயில்சேவைகள் பீகாரில் ரயில் போக்குவரத்தில் புதிய பரிமாணத்தை வழங்குவதுடன் பயணிகளுக்கு மேம்பட்ட போக்குவரத்து சேவையையும் அளிக்கிறது. இந்தப் புதிய ரயில்சேவைகளுடன் அம்மாநிலத்தின் மொத்தம் 26 அம்ரித் பாரத் விரைவு ரயில்சேவைகள் செயல்பாட்டில் உள்ளன. 
முசாஃபர்பூர் – சார்லபள்ளி அம்ரித் பாரத் விரைவு ரயில் அம்மாநிலத்திலிருந்து தென்னிந்தியாவிற்கான முதலாவது அம்ரித் பாரத் ரயில் சேவையாகும். சாப்ரா – ஆனந்த் விஹார், அம்ரித் பாரத் விரைவு ரயில், பீகார் - தில்லி இடையேயான 6-வது அம்ரித் பாரத் ரயில் என்பது குறிப்பிடத்தக்கது. 
இந்நிகழ்ச்சியில் காணொலி மூலம் உரையாற்றிய மத்திய ரயில்வே துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், பீகாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் விரைவான வளர்ச்சித் திட்டப்பணிகள் விரைவில் அம்மாநிலத்தை வளமிக்கதாக உருவெடுக்க உதவிடும் என்று தெரிவித்தார். இந்த ரயில் சேவைகள் அம்மாநிலத்திற்கு புதிய போக்குவரத்து சேவைகளை வழங்குவதுடன் பயணிகளுக்கான வசதிகள் மேம்படுத்தப்பட்டு அம்மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை விரைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளன. 
2014-ம் ஆண்டு திரு நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு பீகாரில் ரயில் கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டு வந்ததாக அவர் கூறினார். 2014-ம் ஆண்டுக்கு முன்பு வருடாந்திர ரயில் பட்ஜெட் 1,000 கோடி ரூபாய் என்ற நிலையிலிருந்து தற்போது 10,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்று அவர் கூறினார். மேலும் பீகார் மாநிலத்தில் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு தற்போது ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகள் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார். மாநிலம் முழுவதிலும் உள்ள ரயில் வழித்தடங்கள், முழுவதும் மின்மயமாக்கப்பட்டுள்ளதாகவும் 1899 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிய ரயில்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2172674   
***
SS/SV/KPG/RJ
                
                
                
                
                
                (Release ID: 2172752)
                Visitor Counter : 17