ஆயுஷ்
மருத்துவ மூலிகை சாகுபடி குறித்த ஆயுர்ஃபார்ம் 2025 சான்றிதழ் படிப்பு, புதுதில்லியின் அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் நிறைவடைந்தது
प्रविष्टि तिथि:
27 SEP 2025 7:13PM by PIB Chennai
ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பான புதுதில்லியின் அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் , "ஆயுர்ஃபார்ம் 2025: ஆயுர்வேத மூலிகைகளின் சாகுபடி மற்றும் பரவல்" என்ற ஐந்து நாள் சான்றிதழ் படிப்பை இன்று நிறைவு செய்தது. 2025 செப்டம்பர் 22 முதல் 26 வரை திரவியகுணாத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சி, 2025 ஆயுர்வேத தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகும்.
தொடக்க அமர்வில் உத்தராகண்ட் மாநிலத்தின் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் டாக்டர் சமீர் சின்ஹா, வன வளங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் மருத்துவத் தாவரங்களின் நிலையான பயன்பாட்டையும் குறித்து வலியுறுத்தினார். கௌரவ விருந்தினராக, ஆயுஷ் அமைச்சகத்தின் தேசிய மருத்துவ தாவர வாரியத்தின் முன்னாள் துணைத் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் சந்திர சேகர் சன்வால், தரமான மருத்துவ தாவரங்களின் விநியோகச் சங்கிலியை வலுப்படுத்த கொள்கை கட்டமைப்புகள் மற்றும் சாகுபடி உத்திகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
நிறைவு அமர்வில் மூத்த ஆயுர்வேத அறிஞர் டாக்டர் மாயாராம் உனியல் உரையாற்றினார். அவர் பாரம்பரிய ஆயுர்வேத ஞானத்தை நவீன வேளாண் நடைமுறைகளுடன் ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இந்தியா முழுவதிலுமிருந்து மொத்தம் 27 பங்கேற்பாளர்கள் இந்த பாடத்திட்டத்தில் கலந்து கொண்டனர், இது அந்தந்தத் துறைகளில் சிறந்து விளங்கும் ஆறு நிபுணர்களால் நடத்தப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2172231
******
(Release ID: 2172231)
SS/BR/SG
(रिलीज़ आईडी: 2172491)
आगंतुक पटल : 27