PIB Headquarters
azadi ka amrit mahotsav

பிஎஸ்என்எல்-லின் உள்நாட்டு 4ஜி சேவை அறிமுகம் சுதேசி உணர்வைப் பிரதிபலிக்கிறது

Posted On: 28 SEP 2025 4:07PM by PIB Chennai

இந்தியா தனது உள்நாட்டு 4ஜி நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தி, கிட்டத்தட்ட 98,000 சுதேசி 4ஜி கோபுரங்கள் மூலம் அதனை இயக்குகிறதுஇவை அனைத்தும் உள்நாட்டு தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகின்றன.

2ஜி , 3ஜி  மற்றும் 4ஜி போன்ற தொலைத்தொடர்பு சேவைகளுக்கு முன்னர் வெளிநாட்டு தொழில்நுட்பத்தை நம்பியிருந்த இந்தியா, இப்போது உள்நாட்டு 4ஜி நெட்வொர்க்கை வெளியிட்டுள்ளது. இந்தச் சாதனை, சுதேசி உணர்வை வலுப்படுத்தி, முழுமையாக உள்நாட்டு 4ஜி சேவைகளைத் தொடங்கக்கூடிய ஐந்து நாடுகளில் ஒன்றாக இந்தியாவை மாற்றியுள்ளது.

4ஜி  என்பது நான்காம் தலைமுறை வயர்லெஸ் தொடர்பின் சுருக்கமான பெயர், இது 5ஜி (ஐந்தாம் தலைமுறை வயர்லெஸ்)-யின் முன்னோடியாகும்.

பிஎஸ்என்எல்-லின்  உள்நாட்டு 4ஜி சேவைகள் பழங்குடிப் பகுதிகள், தொலைதூர கிராமங்கள் மற்றும் மலைப்பாங்கான பகுதிகளுக்கு தரமான டிஜிட்டல் சேவைகளை வழங்குவதன் மூலம் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கிராமப்புறங்களில் உள்ள குழந்தைகள் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளவும், தொலைதூர இடங்களில் உள்ள விவசாயிகள் பயிர் விலைகளைச் சரிபார்க்கவும், நோயாளிகள் டெலிமெடிசின் மூலம் மருத்துவர்களை அணுகவும் உதவும். கூடுதலாக, மேம்பட்ட இணைப்பு மூலம் பாதுகாப்பான தகவல்தொடர்புகளை மேம்படுத்துவதன் மூலம் இந்த முயற்சி ஆயுதப்படை வீரர்களுக்குப் பெரிதும் பயன்படும்.

உள்நாட்டு 4ஜி தொழில்நுட்பத்தின் வெற்றிகரமான பயன்பாடு மற்றும் 5ஜி விரிவாக்கம் டிஜிட்டல் இணைப்பை துரிதப்படுத்துகிறது. எதிர்கால முன்னேற்றங்களுக்காக இந்தியாவின் தொலைத்தொடர்பு சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்துகிறது.

 5 ஜி சேவைகள் 2022 அக்டோபர் 1 அன்று தொடங்கப்பட்டன. தொடங்கப்பட்ட 8 மாதங்களுக்குள், 700 மாவட்டங்களை உள்ளடக்கிய 2,00,000 தளங்கள் நிறுவப்பட்டுள்ளன.

28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களிலும் 5ஜி  நெட்வொர்க் அறிமுகப்படுத்தப்பட்டது.

 தற்போது, நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் 5ஜி கிடைக்கிறது.

 ஜூன் 30 நிலவரப்படி, நாடு முழுவதும் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களால்  4.86 லட்சம்  அடிப்படை டிரான்ஸ்ஸீவர் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2172447

*****

Release ID:( 2172447)

SS/PKV/SG

 

 


(Release ID: 2172489) Visitor Counter : 16
Read this release in: English , Gujarati , Urdu , Hindi