தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
புதிதாக பதவி உயர்வு பெற்ற வருங்கால வைப்பு நிதி உதவி ஆணையர்களுக்கான பயிற்சி நிறைவு
प्रविष्टि तिथि:
28 SEP 2025 1:31PM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தேசிய சமூகப் பாதுகாப்பு அகாடமி , புதிதாக பதவி உயர்வு பெற்ற வருங்கால வைப்பு நிதி உதவி ஆணையர்களுக்கான மூன்று வார நோக்குநிலை பயிற்சி திட்டத்தை நிறைவு செய்தது. நிறைவு அமர்வில் மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையர் திரு ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு, அடுத்த தலைமுறை அதிகாரிகளை அறிவு, கருணை, பொதுத் தொண்டு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட தலைமைத்துவத்திற்கு தயார்படுத்துவதில் அகாடமியின் முயற்சிகளைப் பாராட்டினார்.
மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையர் திரு ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி , பயிற்சியாளர்களின் உற்சாகமான பங்கேற்புக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் ஒரு முழுமையான பயிற்சி அனுபவத்தை நிர்வகித்ததற்காக தேசிய சமூகப் பாதுகாப்பு அகாடமியைப் பாராட்டினார். வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் முக்கிய மதிப்புகளான நேர்மை, பொறுப்புடைமை மற்றும் கருணையை நிலைநிறுத்த அதிகாரிகளை அவர் ஊக்குவித்தார்.
******
Release ID:( 2172397)
SS/PKV/SG
(रिलीज़ आईडी: 2172464)
आगंतुक पटल : 30