ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தூய்மையே சேவை – 2025 இயக்கம் : ஜவுளி அமைச்சகத்தின் தூய்மைப் பணிகள்

Posted On: 26 SEP 2025 12:46PM by PIB Chennai

“ஒரு நாள், ஒரு மணி நேரம், ஒன்று சேர்ந்து” என்ற நாடு தழுவிய தூய்மைப் பணியின் ஒரு பகுதியாக உத்யோக் பவனில் மத்திய ஜவுளி அமைச்சகம் தூய்மைப் பணிகளை மேற்கொண்டது.  

இந்திய சணல் கழகம், அதன் தலைமையகத்திலும் நாடு முழுவதும் உள்ள மண்டல அலுவலகங்கள் மற்றும் கொள்முதல் மையங்களில் உடல் உழைப்பில் ஈடுபட்டதோடு “ஒரு நாள், ஒரு மணி நேரம், ஒன்று சேர்ந்து” என்ற நடவடிக்கையிலும் தாயின் பெயரில் ஒரு மரக்கன்று செயல்பாட்டிலும் ஈடுபட்டது.

மேலும் தூய்மை பேரணிகளுக்கும், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்போம் என்பது குறித்து வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்வதற்கும் இந்திய சணல் கழகம் ஏற்பாடு செய்திருந்தது.

துப்புரவுத் தொழிலாளர்களுக்கான நல இயக்கங்களை மேற்கொண்ட இந்தக் கழகம் 120-க்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு சுகாதார பரிசோதனைகள் மற்றும் மருத்துவ உதவிகளை செய்தது. பெர்ஹாம்பூரில் உள்ள மத்திய பட்டு வாரியம் பட்டுப்புழுவின் கூடுகளைக் கொண்டு அழகான கைவினைப் பொருட்களை உருவாக்கினர். கழிவிலிருந்து செல்வம் என்பதைப்போல் கழிவிலிருந்து கலை என்ற பணிகளில் முதுநிலைப் பட்டயப்படிப்பு மாணவர்கள் ஈடுபட்டனர்.

***

(Release ID: 2171597)

SS/SMB/SG/SH

 


(Release ID: 2172000) Visitor Counter : 5
Read this release in: English , Urdu , Hindi