சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் 84-வது நிறுவன தினத்தையொட்டி இன்று சென்னையில் உள்ள சிஎஸ்ஐஆர் வளாகத்தில் அனைவரும் பங்கேற்கும் வகையில் கொண்டாடப்பட்டது
Posted On:
26 SEP 2025 3:59PM by PIB Chennai
2WDJ.jpeg)
மத்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ், தன்னாட்சி பெற்ற அமைப்பாக இயங்கி வரும் புதுதில்லியில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கவுன்சிலின் 84-வது நிறுவன தினத்தையொட்டி இன்று அனைவரும் பங்கேற்கும் வகையில் கொண்டாடப்பட்டது. சென்னை தரமணியில் உள்ள சிஎஸ்ஐஆர் வளாகத்தில் இந்தக் கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக சிஎஸ்ஐஆர் – வடிவமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் மற்றும் அதன் பிராந்திய அலகுகள் சார்பில், சென்னை தரமணியில் உள்ள சிஎஸ்ஐஆர் வளாகத்தில் இத்தினம் கொண்டாடப்பட்டது. சென்னை திரிசூலத்தில் உள்ள அலைக்கற்றை பரிசோதனை கோபுரம் மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகத்திலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
சென்னை தரமணியில் சிஎஸ்ஐஆர் வளாகத்தில் உள்ள அனைத்து ஆய்வகங்கள் மற்றும் திரிசூலத்தில் உள்ள அலைக்கற்றை கோபுர பரிசோதனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் வளாகத்திலும் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு வருகை தருபவர்களை வரவேற்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. மேலும் சிஎஸ்ஐஆர் அமைப்பால் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட கருவிகளும், தொழில்நுட்பம் சார்ந்த அதிநவீன உபகரணங்களும் பார்வையாளர்கள் காணும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், நிறுவனங்களின் பிரதிநிதிகள், தொழில் முனைவோர்கள், பொதுமக்கள் என 9,200-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2171726
***
SS/SV/KPG/SH
(Release ID: 2171885)
Visitor Counter : 36