பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு துறை, தூய்மையே சேவை இயக்கத்தை தொடங்கியது

प्रविष्टि तिथि: 24 SEP 2025 1:11PM by PIB Chennai

தூய்மையான, குப்பைகள் இல்லாத இந்தியா என்ற மத்திய அரசின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப தூய்மையே சேவை இயக்கத்தை மத்திய நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு துறை தொடங்கியுள்ளது. தூய்மை விழா என்ற மையப்பொருளுடன் நடைபெறும் இந்த ஆண்டின் இயக்கம் தேசத் தந்தை மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2 அன்று நிறைவடையும்.

இதன் ஒரு பகுதியாக, துப்புரவு மற்றும் தூய்மைக்கு கூட்டான உறுதிப்பாடு என்பதை  வலியுறுத்தும் வகையில் 2025 செப்டம்பர் 24 அன்று இந்தத் துறையின் அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு துறையின் செயலாளர் உறுதிமொழி செய்துவைத்தார்.

பொதுமக்களுடன் இணைந்து செயல்படும் குறிப்பிடத்தக்க நடவடிக்கைக்கு 2025 அக்டோபர் 1 அன்று தூய்மை இயக்கத்திற்கு இந்தத் துறை ஏற்பாடு செய்துள்ளது. புதுதில்லியில் உள்ள நேரு பூங்காவில் நடைபெறும் தூய்மையே சேவை இயக்கத்திற்கு மத்திய ஊழியர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமை தாங்குவார்.

இந்த நிகழ்வின் போது துப்புரவு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதோடு அவர்களின் பாதுகாப்பான, தூய்மையான வாழ்க்கை முறையை மேம்படுத்த உடல்நலப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும்.

***

(Release ID: 2170505 )

SS/SMB/AG/SH


(रिलीज़ आईडी: 2170858) आगंतुक पटल : 31
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी