மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
நீடித்த கால்நடை வளர்ப்புக்கு ஆயுர்வேதம் அடிப்படையிலான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்: திரு நரேஷ் பால் கங்குவார்
Posted On:
24 SEP 2025 8:39AM by PIB Chennai
கால்நடை விவசாயிகளுக்காக மரபு வழி கால்நடை மருத்துவம் குறித்த காணொலி வாயிலான விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் உள்ள கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை ஏற்பாடு செய்திருந்தது. “மக்களுக்காக மற்றும் பூமிக்காக ஆயுர்வேதம் என்ற தலைப்பில், இந்த ஆண்டு கொண்டாடப்பட்ட 10-வது ஆயுர்வேத தினத்தையொட்டி, 2025 செப்டம்பர் 23 அன்று இந்தக் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறைச் செயலாளர் திரு நரேஷ் பால் கங்குவார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், 2000-க்கும் அதிகமான பொதுச் சேவை மையங்கள் மூலம் பங்கேற்றனர்.
அப்போது பேசிய திரு நரேஷ் பால் கங்குவார், நீடித்த கால்நடை சுகாதார மேலாண்மையை மேம்படுத்துவதற்கு நவீன கால்நடை வளர்ப்பு முறைகளுடன், ஆயுர்வேதத்தை ஒருங்கிணைக்க வேண்டியதன் முக்கியத்தும் குறித்து வலியுறுத்தினார். மரபுவழி கால்நடை மருத்துவம், குறைந்த செலவுடையதாகவும் கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கு உகந்ததாகவும் இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
***
SS/IR/KPG/KR
(Release ID: 2170560)
Visitor Counter : 11