பாதுகாப்பு அமைச்சகம்
இந்திய கடற்படையில் ஆன்ட்ரோத் போர்க்கப்பல் சேர்க்கப்படவுள்ளது
Posted On:
23 SEP 2025 5:04PM by PIB Chennai
இந்திய கடற்படையில் ஆன்ட்ரோத் என்னும் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல் சேர்க்கப்படவுள்ளது. இதற்கான நிகழ்ச்சி 2025 அக்டோபர் 6 அன்று விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை தளத்தில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிக்கு கடற்படை கிழக்கு ஆணையகத் தலைவர் ராஜேஷ் பெந்தார்கர் தலைமை வகிக்க உள்ளார். இது கடற்படையில் சேர்க்கப்படவுள்ள இரண்டாவது நீர்மூழ்கி எதிர்ப்பு போர் கப்பலாகும்.
கொல்கத்தாவின் கார்டன் ரீச் கப்பல் கட்டுமானத்தினர் மற்றும் பொறியியலாளர்கள் நிறுவனம் மூலம் 80 சதவீதத்திற்கும் அதிகமான உள்நாட்டு உபகரணங்களைப் பயன்படுத்தி கப்பல் கட்டப்பட்டுள்ளது. கப்பல் தயாரிப்பு இயக்குநகரத்தின் வழிகாட்டுதலின்படி கட்டப்பட்ட கப்பல் 2025 செப்டம்பர் 13 அன்று கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்தியாவில் வளர்ந்து வரும் கடல்சார் தற்சார்புக்கும், தற்சார்பு இந்தியாவின் தொலைநோக்குக்கும் அடையாளமாக ஆன்ட்ரோத் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் கப்பல் கட்டப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2170171
***
SS/IR/RJ/SH
(Release ID: 2170401)