அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
அரசு நிறுவனங்கள், தனியார் துறையினர் இணைந்து செயல்பட வேண்டும் – மத்திய அமைச்சர் திரு ஜிதேந்திர சிங்
Posted On:
23 SEP 2025 4:01PM by PIB Chennai
வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைய அரசு நிறுவனமும், தனியார் துறையும் தடைகளை கடந்து இணைந்து பணியாற்ற வேண்டும் என மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங் வலியுறுத்தியுள்ளார்.
புதுதில்லியில் உள்ள நித்தி ஆயோக் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னேற்றத்திற்கான பாதைகள் என்ற தலைப்பில் நித்தி ஆயோகின் அறிக்கையை மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதானுடன் இணைந்து திரு ஜிதேந்திர சிங் வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், தொடக்கநிலை புத்தொழில் நிறுவனங்கள் வெற்றிகரமாக செயல்பட முதலீட்டில் சமமான கூட்டாண்மையுடன் தொழில்துறையுடன் இணைந்து செயல்படுவது அவசியம் என்றும் திரு ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார்.
உலக புதுமை கண்டுபிடிப்பு குறியீட்டு வரிசையில் இந்தியா 2015-ம் ஆண்டில் 81-வது இடத்தில் இருந்ததாகவும், 2025-ம் ஆண்டு 39-வது இடத்திற்கு முன்னேறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
***
(Release ID: 2170134 )
AD/GK/AG/SH
(Release ID: 2170392)