PIB Headquarters
ஜிஎஸ்டி குறைப்பால் தமிழ்நாட்டில் விலை குறையும் பொருட்கள்
प्रविष्टि तिथि:
23 SEP 2025 3:22PM by PIB Chennai
ஜிஎஸ்டி வரி விகிதம் குறைப்பால் தமிழ்நாட்டில் பாரம்பரிய கைத்தறிப் பொருட்கள், கைவினைப் பொருட்கள், தொழில்துறையினர், ஆட்டோமொபைல், மின்னணுவியல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பாதுகாப்புத் தளவாடங்களை தயாரிப்போர் நேரடி நன்மையை பெறுகின்றனர்.
திருப்பூரின் பின்னலாடை தொழிலாளர்கள், காஞ்சிபுரம் நெசவாளர்கள், பொள்ளாச்சி தென்னை நார் பொருள் உற்பத்தி கலைஞர்கள், நாகப்பட்டினம் மீனவர்கள், ஸ்ரீபெரும்புதூர் ஆட்டோமொபைல் தொழிலாளர்கள், ஆவடி பொறியாளர்கள் உள்ளிட்டோர் பயனடைவார்கள்.
ஜிஎஸ்டி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால் திருப்பூரில் உள்ள ஆடை ஆயத்த நிறுவனங்களுக்கான செலவுகள் 6 முதல் 11 சதவீதம் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் லாபம் அடைய இது உதவுகிறது. சர்வதேச அளவிலான சந்தையில் இந்தியா தனது நிலையை தக்கவைத்து கொள்ள இது உறுதிசெய்கிறது.
காஞ்சிபுரம் பட்டு சேலை உற்பத்தி பொருளுக்கான ஜிஎஸ்டி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால் உற்பத்தியாளர்களின் செலவு 7 சதவீதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் காஞ்சிபுரம் பட்டுசேலையின் விலை 2 முதல் 4 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது.
புவிசார் குறியீடு பெற்ற ஈரோடு பவானி ஜமுக்காளம், விரிப்புகள் மற்றும் மதுரை சுங்குடிப்புடவைகள் விலை 6 சதவீதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஏற்றுமதி சந்தையில் இந்தப் பொருட்களின் போட்டித்தன்மை அதிகரிக்கும்.
சுவாமிமலை வெண்கலப் பொருட்களுக்கான அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி ஜிஎஸ்டி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால் 6 சதவீதம் வரை விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் புவிசார் குறியீடு பெற்ற கைவினைப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால் இந்தப் பொருட்களின் விலை 6 சதவீதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல் தஞ்சாவூர் பொம்மைகள் மற்றும் பாரம்பரிய பொருட்கள் சேலம் மற்றும் காஞ்சிபுரத்தில் கையால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கான ஜிஎஸ்டி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது இந்தப் பொருட்களை உற்பத்தி செய்யும் கைவினை கலைஞர்களின் குடும்பங்களுக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொள்ளாச்சி, காங்கேயம் மற்றும் கடலூர் பகுதிகளில் தென்னை நார் மூலம் உற்பத்தி செய்யப்படும் பாய்கள், கயிறுகள் மற்றும் ஜவுளி ரகங்களுக்கான ஜிஎஸ்டி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைந்துள்ளது. இதனால் இந்தப் பொருட்களின் விலை தற்போது 6-7 சதவீதம் வரை குறையும். இதன் மூலம் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆவின் பால் பொருட்களுக்கான ஜிஎஸ்டி குறைப்பால் சில்லரை விலையில் இந்தப் பொருட்களை வாங்கும் நுகர்வோர் பயனடைவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி குறைப்பால் திருச்சி மணப்பாறை பகுதியில் தயாரிக்கப்படும் புவிசார் குறியீடு பெற்ற முருக்கு உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை 6 சதவீதம் வரை குறையும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2170103
***
SS/GK/AG/SH
(रिलीज़ आईडी: 2170390)
आगंतुक पटल : 52