PIB Headquarters
இந்தியாவில் இணையதள பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
Posted On:
23 SEP 2025 3:01PM by PIB Chennai
சர்வதேச அளவில் விரைவாக டிஜிட்டல் பயன்பாடு வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றான இந்தியாவில் இணைய இணைப்பு பயனாளிகளின் எண்ணிக்கை 2025 ஏப்ரல், ஜூன் மாதங்களில் 1002.85 மில்லியனாக உள்ளது. இது இந்தியாவின் டிஜிட்டல் புரட்சி தாக்கத்தை வெளிப்படுத்துகிறது. எனினும் நாட்டின் சில பகுதிகளில் இணைய இணைப்பு குறைவாக உள்ளது. இது செயற்கைக்கோள் இணைய சேவையின் தேவையை எடுத்துரைக்கிறது.
டிஜிட்டல் இந்தியா தொலைநோக்குப் பார்வை இலக்கைப் பூர்த்தி செய்யும் செயற்கைக்கோள் இணைய சேவை விண்வெளியில் இருந்து எந்தவொரு பகுதிக்கும் நேரடியாக இணைப்பை வழங்கும் ஆற்றல் கொண்ட தொழில்நுட்பமாகும். இது தொலைதூரப் பகுதிகளில் உள்ள கிராமங்கள், எல்லையோரப் பகுதிகள், மலைப்பாங்கான நிலப்பரப்புகள் போன்ற கடினமான, பொருளாதார ரீதியில் சாத்தியமில்லாத இடங்களுக்கு இணைய சேவை கிடைப்பதை உறுதிசெய்கிறது.
செயற்கைக்கோள் தகவல் தொடர்புகளை நிர்வகிக்க மத்திய அரசு ஒரு ஒழுங்குமுறை கட்டமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இது செயற்கைக்கோள் இணையவசதி அதிகளவில் கிடைக்க வழிவகை செய்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2170091
***
AD/GK/AG/SH
(Release ID: 2170389)
Visitor Counter : 5