சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

தொலைத் தொடர்பு பயனாளிகளுக்கு விழிப்புணர்வு முகாம் - டிராய் ஏற்பாடு

இடுகை இடப்பட்ட நாள்: 23 SEP 2025 5:33PM by PIB Chennai

 

இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைந்து தொலைத் தொடர்பு பயனாளிகளுக்கான விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சியை 2025 செப்டம்பர் 23 அன்று நடத்தியது. தொலைத் தொடர்பு பயனாளிகளின் உரிமைகள் மற்றும் சலுகைகள் குறித்து சிதம்பரத்தில் இன்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அதிகளவில் மாணவர்கள், தொலைத் தொடர்பு பயனாளிகள், தொலைத் தொடர்பு நிறுவனங்களின் முகவர்கள், பல்கலைக்கழக அலுவலர்கள் பங்கேற்றனர்.

டிராய் அமைப்பின் ஐதராபாத் பிரிவு இணை ஆலோசகர் திரு சுரேஷ் பாபு இதில் பங்கேற்று பயனாளிகள் பாதுகாப்புடன் தொலைத் தொடர்பு ஆணையத்தின் செயலிகளை பயன்படுத்துவது குறித்து எடுத்துரைத்தார்.  வாடிக்கையாளர்கள் தொலைத் தொடர்பு சேவைகளின் தரம் மற்றும் செயல்பாட்டை மதிப்பிட உதவும் டிராய் செயலிகள் மைஸ்பீடு, டு நாட் டிஸ்டப் மற்றும் மை கால் உள்ளிட்டவைகளை பயன்படுத்துமாறு அவர் வலியுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் டிராய் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழக அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.

 

***

SS/GK/AG/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2170208) வருகையாளர் எண்ணிக்கை : 22
இந்த வெளியீட்டை படிக்க: English