தேசிய மனித உரிமைகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

தில்லி ஐஹெச்பிஏஎஸ் மருத்துவமனையில் போதிய வசதியின்மை காரணமாக பிறந்த குழந்தை இறந்தது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்கிறது

Posted On: 23 SEP 2025 12:24PM by PIB Chennai

நீதிமன்ற உத்தரவுபடி 2025 செப்டம்பர் 7 அன்று தில்லி ஐஹெச்பிஏஎஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆதரவற்ற நோயாளிக்கு பிறந்த குழந்தை மருத்துவமனையில் போதிய வசதியின்மை காரணமாக உயிரிழந்தது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை மேற்கொள்கிறது. அவசர ஊர்தியில் அருகிலுள்ள சுவாமி தயானந்த் மருத்துவமனைக்கு அவர்களை கொண்டு செல்வதற்கு முன்பாக குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவதற்கான கருவியை கையாள்வதற்கு கூட மருத்துவமனை ஊழியர் நீண்ட நேரம் எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் குழந்தை உயிரிழக்க நேரிட்டது.

ஊடகங்களில் வெளியான இந்த செய்தி உண்மை எனில், இது மனித உரிமைகளை மீறக் கூடியது என்று ஆணையம் கருதுகிறது. இதையடுத்து இவ்விவகாரம் தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தலைநகர் தில்லி அரசின் தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பிரசவத்திற்கு தேவையான வசதிகள் இல்லாத போதிலும் அந்த மருத்துவமனையில் அந்த கர்ப்பிணி அனுமதிக்கப்பட்டதாக ஊழியர்கள் தெரிவித்தனர் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.  தற்போது அவர் மற்றொரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.     

***

(Release ID: 2169977)

SS/IR/RJ/KR


(Release ID: 2170079) Visitor Counter : 2
Read this release in: English , Urdu , Hindi