சுற்றுலா அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய சமையல் கலையை மையப்படுத்தும் வகையில் நாடு தழுவிய சமையல் கலைப் போட்டிகள்

இடுகை இடப்பட்ட நாள்: 19 SEP 2025 11:27AM by PIB Chennai

இந்தியாவின் சிறந்த சமையல்கலை பாரம்பரியத்தை நாட்டின் கிழக்குப் பிராந்தியத்தில் மையப்படுத்தும் வகையில், தேசிய இளையோர் சமையல் போட்டியை பிஎச்டி வர்த்தகம் மற்றும் தொழில்சபை, இந்திய சமையல்கலை சங்க கூட்டமைப்பு, மத்திய சுற்றுலா அமைச்சகம் மற்றும் சுற்றுலா விருந்தோம்பல் திறன் மேம்பாட்டு குழுமம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. இந்தப் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஹோட்டல் மேலாண்மை, சமையல் தொழில்நுட்ப மற்றும் ஊட்டச்சத்து நிறுவனத்தின் வளாகத்தில் நேற்று  (18.09.2025) நடைபெற்றது. இதில், கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த முன்னணியில் உள்ள பல்வேறு ஹோட்டல் மேலாண்மை நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

புதுதில்லியில் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் பங்கேற்பவர்களை தேர்ந்தெடுக்கும் வகையில் நாடு முழுவதும் 6 மாத காலமாக  மண்டல அளவில் சமையல் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. சண்டிகரில் நடைபெற்ற வடக்கு மண்டலத்திற்கான சமையல்கலைப் போட்டிகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததையடுத்து தற்போது கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. இந்திய பாரம்பரிய உணவு வகைகளை புதுமையான வகையில் சமைத்து காட்சிப்படுத்தப்பட்ட இப்போட்டியில் 11 நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2168349

***


SS/SV/KPG/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2168398) வருகையாளர் எண்ணிக்கை : 18
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी