சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களின் தரத்தை மேம்படுத்த திட்ட முன்மொழிவுகள் விதிமுறைகளை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கடுமையாக்கியுள்ளது

Posted On: 17 SEP 2025 2:48PM by PIB Chennai

தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களின் ஒட்டுமொத்த செலவுகளைக் குறைக்கவும்தாமதங்களைத் தவிர்க்கவும் மற்றும் திட்டங்களை செயல்படுத்தலின் தரங்களை மேம்படுத்தவும்ஒப்பந்ததாரரின் தகுதிகளுக்கான விதிமுறைகளை வலுப்படுத்துவதையும்திட்ட செயல்படுத்துதலில் இணக்கத்தை அமல்படுத்துவதையும்நிதி சமர்ப்பிப்புகளில் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட திட்ட முன்மொழிவு விதிமுறைகளை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி. பல்வேறு பிரிவுகளில் தொழில்நுட்ப ரீதியாக திறமையான மற்றும் அனுபவமிக்க ஒப்பந்ததாரர்கள் மட்டுமே தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை செயல்படுத்த தகுதி பெறுவதை உறுதி செய்ய முடியும்.

இந்நடவடிக்கைகள் சிறந்த உள்கட்டமைப்புத் தரம்உரிய நேரத்தில் திட்டங்களை நிறைவு செய்தல்வளங்களை முறையாக பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு வகை செய்து தேசிய நெடுஞ்சாலைப் பணிகளில் மேலும் திறன்மிக்க  வளர்ச்சியை அடையச் செய்யும்

 

                                                                                                                                                                                                                                                                                   ----- 

SS/IR/KPG/KR/SH


(Release ID: 2167888) Visitor Counter : 2
Read this release in: English , Urdu , Hindi , Malayalam