ஆயுஷ்
ஆயுர்வேத தினத்தையொட்டி அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை நடத்தியது
Posted On:
17 SEP 2025 12:15PM by PIB Chennai
ஆயுர்வேத தினம் 2025 கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக 2025 செப்டம்பர் 17 அன்று புதுதில்லியில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை வெற்றிகரமாக நடத்தியது. ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நீடித்த சுற்றுச்சூழலில் ஆயுர்வேதத்தின் பங்களிப்பை எடுத்துரைக்கும் வகையில், மக்கள் மற்றும் பூமிக்காக ஆயுர்வேதம் என்ற தலைப்பின் கீழ் இந்த நிகழ்வு நடைபெற்றது.
அகில இந்திய ஆயுர்வேத நிறுவன இயக்குநர் பேராசிரியர் டாக்டர் பிரதீப் குமார் பிராஜபதி, இரு சக்கர வாகன பேரணியை அகில இந்திய ஆயுர்வேத நிறுவன வளாகத்திலிருந்து கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். துறைத்தலைவர்கள், ஆசிரியர்கள், முதுநிலை மற்றும் பி.எச்டி ஆராய்ச்சியாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோருடன் முன்னாள் இயக்குநர் பேராசிரியர் டாக்டர் மஞ்சுஷா ராஜ்கோபாலா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்திலிருந்து ஆயுஷ் அமைச்சகம் வரை இருசக்கர வாகனத்தில் சென்ற பங்கேற்பாளர்கள் ஆயுர்வேத தின இலச்சினை மற்றும் கருபொருள் குறித்த வாசகங்களை வைத்திருந்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2167488
***
SS/IR/KPG/KR
(Release ID: 2167651)
Visitor Counter : 2