சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
சிறப்பு இயக்கம் 5.0-வில் நீதித்துறை பங்கேற்கிறது
இடுகை இடப்பட்ட நாள்:
17 SEP 2025 12:04PM by PIB Chennai
நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீ்ர்ப்பு துறையின் வழிகாட்டுதலின் கீழ், நீதித்துறை அலுவலக வளாகங்களில் நிலுவைப் பணிகளைக் களைவது, தூய்மைப் பணிகளில் கவனம் செலுத்துவது ஆகியவற்றுக்காக சிறப்பு இயக்கம் 5.0 மேற்கொள்ளப்படுகிறது. இந்த இயக்கம் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளன. முதல் கட்டத்தில் நிலுவையில் உள்ள பல்வேறு பணிகள் குறித்து கண்டறியப்பட உள்ளன. இப்பணிகள், 15.09.2025 முதல் 30.09.2025 வரை நடைபெறுகிறது. அத்துடன் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய இடங்களும் கண்டறியப்படும்.
இரண்டாம் கட்டமாக, கண்டறியப்பட்ட நிலுவையில் உள்ள பணிகள் மற்றும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய இடங்களில், 02.10.2025 முதல் 31.10.2025 வரை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. நிலுவையில் உள்ள பணிகளை உரிய நேரத்தில் தீர்வு காண நீதித்துறை உறுதிபூண்டுள்ளது. இப்பணிகள் நாள்தோறும் கண்காணிக்கப்பட்டு சிறப்பு இயக்கம் 5.0-க்கான இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2167476
***
SS/IR/KPG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2167648)
வருகையாளர் எண்ணிக்கை : 22