கனரகத் தொழில்கள் அமைச்சகம்
பழைய பொருட்களை அகற்றியதன் மூலம் ரூ.52.30 கோடி வருவாயை ஈட்டியது கனரக தொழில்துறை அமைச்சகம்
प्रविष्टि तिथि:
16 SEP 2025 12:49PM by PIB Chennai
பொது இடங்கள் மற்றும் பணியிடங்களில் தூய்மை மற்றும் சுகாதாரத்தை பின்பற்ற வேண்டும் என்ற மத்திய அரசின் தூய்மை இயக்கத்தையொட்டி, மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம் நாடு முழுவதும் தூய்மை மற்றும் பசுமை முன்முயற்சிகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்கிறது.
2024 டிசம்பர் முதல் 2025 ஆகஸ்ட் வரை மேற்கொள்ளப்பட்ட 556 தூய்மைப் பணிகளின் போது 2823 கோப்புகள் கழிக்கப்பட்டன. 2.24 லட்சம் சதுர அடி அலுவலக இடம் விடுவிக்கப்பட்டது. பழைய பொருட்களை அகற்றியதன் மூலம் சுமார் ரூ.52.30 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. இந்நிலையில், 2025 அக்டோபர் 2 முதல் 31 வரை நடைபெறவுள்ள சிறப்பு இயக்கம் 5.0-வின் போது பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய இடங்களை இறுதி செய்யும் நடைமுறையில் அமைச்சகம் ஈடுபட்டு வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2167078
***
SS/IR/KPG/KR
(रिलीज़ आईडी: 2167227)
आगंतुक पटल : 28