ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிறப்பு இயக்கம் 5.0-விற்காக மருந்து உற்பத்தி துறை தயாராகி வருகிறது

Posted On: 15 SEP 2025 12:00PM by PIB Chennai

நிலுவையில் உள்ள பணிகளை நிறைவு செய்வதற்கான சிறப்பு இயக்கம் 5.0-க்கு மத்திய ரசாயன மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் மருந்து உற்பத்தி துறை தயாராகி வருகிறது.

நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு துறை வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி, இந்த இயக்கத்திற்கான இலக்கு 2025 செப்டம்பர் 25-க்குள் இறுதி செய்யப்படும். முழு பங்களிப்பு மற்றும் உரிய நேரத்தில் அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய அத்துறையோடு தொடர்புடைய அலுவலகங்கள், தன்னாட்சி அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் உட்பட துறையின் கீழ் உள்ள அனைத்து அமைப்புகளுக்கும் தேவையான அறிவுரைகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன.

கடந்த 2024-ம் ஆண்டு சிறப்பு இயக்கம் 4.0-ன் போது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 11,127 மக்கள் மருந்தகங்கள் தூய்மைப்படுத்தப்பட்டன. பழைய பொருட்களை அகற்றியதன் மூலம் ரூ.44,573 வருவாய் ஈட்டப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2166677

***

AD/SS/IR/AG/KR


(Release ID: 2166720) Visitor Counter : 2
Read this release in: English , Urdu , Hindi