பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ரோம் நகரில் நடைபெற்ற 4-வது கடலோரக் காவல் படையின் உலகளாவிய உச்சிமாநாட்டில் இந்தியா பங்கேற்றது

Posted On: 12 SEP 2025 3:49PM by PIB Chennai

ரோம் நகரில் 2025 செப்டம்பர் 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெற்ற 4-வது கடலோரக் காவல் படையின் உலகளாவிய உச்சிமாநாட்டில் இந்தியா பங்கேற்றது. பாதுகாப்பான, தூய்மையான கடற்பகுதிகளுக்கான திட்டங்களை வடிவமைக்கும் முக்கிய பங்குதாரராக இருப்பதற்கும், உலகளாவிய கடல்சார் நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கும் இந்தியாவின் உறுதிப்பாட்டை இந்தியக் கடலோரக் காவல் படை இந்த உச்சிமாநாட்டில் வலியுறுத்தியது. இரண்டு உறுப்பினர் தூதுக் குழுவிற்கு இந்தியக் கடலோரக் காவல் படையின் தலைமை இயக்குநர் திரு பரமேஷ் சிவமணி தலைமை வகித்தார்.

இந்த உச்சி மாநாட்டில் 115 நாடுகளையும் சர்வதேச அமைப்புகளையும் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இத்தாலியும் ஜப்பானும் கூட்டாக தலைமை வகித்தன. இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, ஜப்பான் பிரதமர், ஷிகேரு இஷிபா (மெய்நிகர் முறையில்) ஆகியோர் உரையாற்றிய போது, கடற்கரை மாறுபாட்டிற்கு தீர்வு காணவும், கடல்சார் ஆராய்ச்சி மற்றும் மீட்புக்கும், கடல்சார் சட்ட அமலாக்கத்திற்கும், கடலோரக் காவல் படை ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர்.

2027-ம் ஆண்டு இந்த உச்சிமாநாட்டை இந்தியாவில் நடத்துவதற்கான விருப்பத்தை இந்தியக் கடலோரக் காவல் படை தெரிவித்தது.

----

 

AD/SMB/KPG/SH

 


(Release ID: 2166103) Visitor Counter : 2
Read this release in: English , Urdu , Hindi