அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
அறிவியல் நிர்வாகிகளுக்கான ஒருவாரகால உறைவிட நிர்வாகப் பயிற்சி: டாக்டர் ஜிதேந்திர சிங் அறிவிப்பு
Posted On:
08 SEP 2025 3:52PM by PIB Chennai
அறிவியல் நிர்வாகிகளுக்கான ஒருவாரகால உறைவிட நிர்வாகப் பயிற்சி பற்றி மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் (தனிபொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று அறிவிப்பு வெளியிட்டார். இந்த முன்னோட்ட முன்முயற்சிக்காக இந்திய தேசிய அறிவியல் கல்விக் கழகத்திற்கு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார். குடிமைப் பணிகள், பயிற்சி மாதிரியில் இந்தப் பயிற்சித் திட்டம் சிறப்பாக அமைய வேண்டும் என்று இன்று கடமை மாளிகையில் தம்மை சந்தித்த இந்திய தேசிய அறிவியல் கல்விக் கழகத்தலைவர் பேராசிரியர் அஷுதோஷ் சர்மாவிடம் தெரிவித்தார்.
விதிகள் அடிப்படையில் என்பதிலிருந்து பங்களிப்பு அடிப்படையில் என்பதாக திறன் கட்டமைப்பு மாறவேண்டும் என்று அறிவுறுத்திய டாக்டர் ஜிதேந்திர சிங், இந்தப் பயிற்சித் திட்டத்தின் விரிவான அணுகலை உறுதி செய்ய இது கர்மயோகி இயக்கத்தின் கீழ் ஐகாட் கர்மயோகி தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் பின்னூட்டங்கள் மூலம் தொடர்ந்து மதிப்புக் கூடுதல் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்திய அமைச்சர், இது நாடு முழுவதிலுமிருந்து வரும் பங்கேற்பாளர்களுக்கு திறன் மேம்பாட்டு வாய்ப்புகளை வழங்கும் என்றார்.
இந்த முன்முயற்சி அறிவியல் நிர்வாகிகளை உருவாக்குவது மட்டுமின்றி, வரும் தசாப்தங்களில் இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்ப சூழல் அமைப்பை வழிநடத்தும் அறிவியல் தலைவர்களை உருவாக்குவது பற்றியதாகும் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
SS/SMB/KPG/KR
(Release ID: 2164798)
Visitor Counter : 2