பாதுகாப்பு அமைச்சகம்
எகிப்தில் நடைபெறவுள்ள ராணுவப் பயிற்சியில் இந்திய ராணுவம் மற்றும் விமானப்படை வீரர்கள் பங்கேற்பு
प्रविष्टि तिथि:
03 SEP 2025 5:23PM by PIB Chennai
இந்திய கடற்படைக் கப்பல் ஐஎன்எஸ் ட்ரிகான்ட் மத்திய தரைக்கடலில் நடைபெறவுள்ள ராணுவப் பயிற்சியில் பங்கேற்பதற்காக 2025 செப்டம்பர் 1 அன்று எகிப்து நாட்டின் அலெக்சாண்ட்ரியா நகரைச் சென்றடைந்தது. எகிப்தில் 2025 செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 10 வரை ப்ரைட் ஸ்டார் பயிற்சி என்ற பெயரில் நடைபெறவுள்ள பயிற்சியில் இந்திய ராணுவத்தினர் மற்றும் இந்திய விமானப்படையினர் ஈடுபட உள்ளனர்.
இப்பயிற்சியில் அமெரிக்கா, எகிப்து, சவூதி அரேபியா, கத்தார், கிரீஸ், சைப்ரஸ், இத்தாலி நாட்டைச் சேர்ந்த படையினரும் பங்கேற்க உள்ளனர். இப்பயிற்சியின் போது இருதரப்பு மற்றும் பல்தரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான செயல்பாடுகள் நடைபெற உள்ளன. ராணுவ உயர் அதிகாரிகளுடனான விவாதம், பரஸ்பரம் கப்பல்களை பார்வையிடுதல், கலாச்சாரப் பரிமாற்றங்கள், விளையாட்டு நிகழ்வுகள் ஆகியவையும் இப்பயிற்சியின் ஒரு பகுதியாக நடைபெறவுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2163382
----
SS/IR/KPG/DL
(रिलीज़ आईडी: 2163807)
आगंतुक पटल : 22