சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
ஜிப்மரில் தேசிய கர்மயோகி மக்கள் சேவை திட்டத்தின் இரண்டாம் கட்ட பயிற்சி பட்டறைகள்
இடுகை இடப்பட்ட நாள்:
03 SEP 2025 12:44PM by PIB Chennai
தேசிய கர்மயோகி மக்கள் சேவை திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் 62 பயிற்சி பட்டறைகளை ஜிப்மர் வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இதில் மருத்துவ ஆசிரியர், செவிலியர், தொழில்நுட்பம், நிர்வாகம் மற்றும் துணை சுகாதார நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பயிற்சிபெற்றனர்.
F3WY.jpeg)
ஜிப்மர் வளாகத்தில் வார இறுதியில் நடத்தப்படும் இந்த ஒரு நாள் பயிற்சி பட்டறைகள், மத்திய அரசின் திறன் மேம்பாட்டு ஆணையத்தால் திட்டமிடப்பட்ட இந்தப் பயிற்சி (பயிற்சி அளிக்கப்பட்ட சிறு குழுக்கள், மற்ற பெரிய குழுக்களுக்கு பயிற்சிகளை வழங்கும் முறை) மாதிரியின் ஒரு அங்கமாகும். இந்த முயற்சி, பணியிடத்தில் செயல்திறன், நோயாளிகளை கையாளும் விதம், சேவைகள் ஆகியவற்றில் பயிற்சி பெற்ற அரசு ஊழியர்களின் ஒரு பிரிவை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தேசிய அளவில் மூன்று நாள் பயிலரங்கு முன்னணி பயிற்சியாளர்களால் வழங்கப்பட்டது. இதில் திறன் மேம்பாட்டு பிரிவில் தேர்ச்சி பெற்ற ஜிப்மரின் முதன்மை பயிற்சியாளர்கள் (கர்மயோகி பயிற்சியாளர்கள்) பயிற்சித் திட்டங்களை குறித்து இதர குழுக்களுக்கு பயிற்சி வழங்கினர். பயிற்சித் திட்டங்கள் குழு அடிப்படையிலான கற்றல், சிக்கல்களுக்கு தீர்வு காணும் நடைமுறைகள், பணியிட சூழல் குறித்த விவாதங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் பங்கேற்பாளர்கள் அனைவரும் முழுமையாக பயிற்சிப் பட்டறையில் பயன்பெற முடிந்தது.
4YAO.jpeg)
இந்த திட்டத்திற்கு மேலும் மதிப்புகூட்டும் வகையில், மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் அதிகாரி திரு ஹென்றி ஆரோக்யா ராஜ், ஜிப்மர் ஊழியர்களுக்கான ஐஜிஓடி கர்மயோகி இணையவழி கற்றல் தளத்தினை அறிமுகப்படுத்தி பயிற்சி அளித்தார். இந்தப் பயிற்சி தளத்தின் அம்சங்கள், பாடநெறி சேர்க்கை செயல்முறைகள் மற்றும் தேசிய சிவில் சேவைகள் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கிடைக்கும் தொடர்ச்சியான கற்றல் வாய்ப்புகள் குறித்து ஊழியர்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
ஜிப்மர் இயக்குநர் டாக்டர் வீர் சிங் நேகி, கர்மயோகி பயிற்சிக்கான முயற்சியை ஜிப்மர் முன்கூட்டியே செயல்படுத்துவது, மத்திய அரசின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப எதிர்காலத்திற்குத் தேவையான சேவை சார்ந்த பணியாளர்களை உருவாக்குவதற்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது என்று அவர் வலியுறுத்தினார்.
3AH8.jpeg)
இதுவரை 2,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களின் வெற்றிகரமான பயிற்சியுடன், சுகாதாரத் துறையில் தேசிய கர்மயோகி திட்டத்தை செயல்படுத்துவதில் ஜிப்மர் ஒரு முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. வரும் வாரங்களில் தொடர்ந்து இந்த பயிற்சி திட்டத்தை விரிவுபடுத்தி, ஒவ்வொரு ஊழியர்களும் மன உறுதியுடனும், நடைமுறையிலும் உண்மையான கர்மயோகியாக பணியாற்றுவதை ஜிப்மர் உறுதி செய்கிறது.
***
SS/SV/AG/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2163423)
வருகையாளர் எண்ணிக்கை : 13