பாதுகாப்பு அமைச்சகம்
தில்லியில் உள்ள கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில் நடைபெறும் ‘தால் சைக்னிக் முகாமில்’ 1,546 தேசிய மாணவர் படை வீரர்கள் பங்கேற்பு
Posted On:
02 SEP 2025 11:53AM by PIB Chennai
தில்லியில் உள்ள கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில், 12 நாள் நடைபெறும் தால் சைக்னிக் முகாம் இன்று தொடங்கியது. இந்த முகாமை, தேசிய மாணவர் படையின் கூடுதல் தலைமை இயக்குநர் மற்றும் விமானப்படை துணைத் தளபதி பி வி எஸ் நாராயணா தொடங்கி வைத்தார்.
இதில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 17 தேசிய மாணவர் படை இயக்குநரகங்களைச் சேர்ந்த 867 மாணவர்கள் மற்றும் 679 மாணவிகள் உள்பட மொத்தம் 1,546 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதில் பங்கேற்கும் தேசிய மாணவர் படை வீரர்கள், தங்களுக்குள் ஒருவருக்கொருவர் ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள உதவும் பல்வேறு போட்டிகளில் ஈடுபட உள்ளனர். குறிப்பாக, தடை தாண்டும் பயிற்சி, வரைபடத்தை படிப்பது உள்ளிட்ட போட்டிகளில் ஈடுபட உள்ளனர்.
இந்த முகாம், தேசிய மாணவர் படை வீரர்களுக்கு இராணுவப் பயிற்சியின் முக்கிய அம்சங்களை வெளிப்படுத்தவும், ஒழுக்கம், தலைமைப் பண்பு மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கவும் உதவுகிறது. மேலும், தங்களுக்குள் ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளவும் இந்த முகாம் உதவும்.
இதுகுறித்து கூடுதல் தலைமை இயக்குநர் பேசுகையில், நாட்டின் இளைஞர்களுக்கு தேசிய மாணவர் படை தனித்துவமான வாய்ப்புகள் மூலம் சாகசம் மற்றும் ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கையை அவர்களுக்கு வழங்குகிறது என்று கூறினார். இந்த முகாமானது, தேசிய மாணவர் படை வீரர்களிடையே தலைமைத்துவம் மற்றும் தோழமை உணர்வை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன்மூலம், வாழ்க்கையின் சவால்களை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள அவர்களைத் தயார்படுத்துகிறது என்று குறிப்பிட்டார்.
***
(Release ID: 2162975 )
SS/EA/DL
(Release ID: 2163157)
Visitor Counter : 3