பாதுகாப்பு அமைச்சகம்
இந்திய விமானப்படையின் பராமரிப்பு பிரிவு அதிகாரியாக ஏர்மார்ஷல் சஞ்ஜீவ் குரோஷியா பொறுப்பேற்பு
प्रविष्टि तिथि:
01 SEP 2025 5:13PM by PIB Chennai
இந்திய விமானப்படை தலைமையகத்தில் பராமரிப்பு பிரிவு அதிகாரியாக ஏர்மார்ஷல் சஞ்ஜீவ் குரோஷியா நியமிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு படையில் சிறப்பாக சேவையாற்றியதற்காக அதி வசிஷ்ட் மற்றும் வசிஷ்ட் சேவைக்கான பதக்கங்களைப் பெற்றுள்ள இவர், இன்று (2025 செப்டம்பர் 1) பராமரிப்பு பிரிவு அதிகாரியாக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அவர் தேசிய போர் நினைவிடத்தில் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த பாதுகாப்பு படை வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
1988-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய விமானப்படையில் விமானப் பொறியியல் பிரிவில் இவர் பணியில் சேர்ந்தார். வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவைக்கான பணியாளர் கல்லூரியின் முன்னாள் மாணவரான இவர், பெங்களூரில் உள்ள விமானப்படை சோதனை விமானிகளுக்கான பயிற்சி பள்ளி மற்றும் விமானப்படையின் தொழில்நுட்ப கல்லூரியில் பணியாற்றியுள்ளார். கல்வித் தகுதி அடிப்படையில் மின்சார பொறியியலாளரான இவர், ஜபல்பூரில் உள்ள ஜிஇசி நிறுவனத்தின் முன்னாள் மாணவர் ஆவார். பிட்ஸ் பிலானி, சென்னை பல்கலைக்கழகம் ஆகியவற்றில் படித்த இவர், போபால் பல்கலைக்கழகத்திலிருந்து முனைவர் பட்டம் பெற்றவர்.
இந்திய விமானப்படையில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ள இவர், ஐநா பாதுகாப்பு படையில் வெளிநாடுகளில் 37 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றியுள்ளார்.
இவரது தலைசிறந்த சேவையை அங்கீகரிக்கும் வகையில் வசிஷ்ட் சேவை பதக்கம் 2016-ம் ஆண்டிலும், அதிவசிஷ்ட் சேவா பதக்கம் 2025-ம் ஆண்டிலும் குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2162736
***
SS/SV/AG/DL
(रिलीज़ आईडी: 2162822)
आगंतुक पटल : 18