தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

பீகார் வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து செப்டம்பர் 1-ம் தேதி வரை மாநில கட்சிகளிடமிருந்து 144 ஆட்சேபம் மற்றும் உரிமைக் கோரல் மனுக்கள் பெறப்பட்டுள்ளது: தேர்தல் ஆணையம்

Posted On: 01 SEP 2025 1:27PM by PIB Chennai

பீகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்பட்டு ஆகஸ்ட் 1 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து செப்டம்பர் 01 காலை 10.00 மணி வரை அம்மாநில மார்க்சிஸ்ட் லெனின்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்து 118 மற்றும் ராஷ்ட்டீரிய ஜனதா தள் கட்சியிடமிருந்து 10 ஆட்சேபம் மற்றும் பிஜேபி கட்சியிலிருந்து 16 உரிமைக் கோரல் மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தேர்தல் ஆணையம் 2025 செப்டம்பர் 01 அன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகளுக்கு 1,60,813 வாக்குச் சாவடி நிலையிலான முகவர்கள் உள்ளனர் என்றும் இவர்கள் மூலமாக இதுவரை 144  உரிமைக்கோரல் அல்லது ஆட்சேப மனுக்கள் பெறப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

நேரடியாக 2,53,524 உரிமை கோரல் அல்லது ஆட்சேபம் பெறப்பட்டன. இவற்றில் 40,630 நேர்வுகள் 7 நாட்களுக்கு பின் பைசல் செய்யப்பட்டன.  18 வயது பூர்த்தி அடைந்தவர்களிடம் இருந்து 16,56,886  படிவங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், விதிமுறைகளின்படி 7 நாட்கள் நிறைவடைந்த பின் அவற்றில் 91,462 படிவங்கள் பைசல் செய்யப்பட்டதாகவும் எஞ்சியுள்ள படிவங்கள் குறித்து சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலர் மூலம் முடிவெடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

2025 ஆகஸ்ட் 01 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர் நகல் பட்டியலில் பெயர்கள் சேர்க்கப்படாத காரணங்கள் தெரிவித்து அந்தப் பட்டியல் வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் தேடும் வகையில் தலைமைத் தேர்தல் அதிகாரி, மாவட்டத் தேர்தல் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்களின், இணையதளங்களில் (மாவட்ட வாரியாக) வெளியிடப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட நபர்கள் தங்களின் உரிமை கோரல்களை ஆதார் அட்டை நகலுடன் சமர்ப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2162605 

***

SS/SV/AG/KR


(Release ID: 2162727) Visitor Counter : 2
Read this release in: English , Urdu , Hindi