சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
கோயம்புத்தூரில் பொதுப் பேருந்து போக்குவரத்து சேவைகள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி
இடுகை இடப்பட்ட நாள்:
30 AUG 2025 6:13PM by PIB Chennai
பொதுப் பேருந்து போக்குவரத்து சேவைகள் – வழிகாட்டுதல்கள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியை இந்திய தர நிர்ணய அமைவனத்தின் கோயம்புத்தூர் கிளை அலுவலகம், கோயம்புத்தூர் தொழில்நுட்பக் கழகத்தின் நூலக மண்டபத்தில் 2025 ஆகஸ்ட் 28 அன்று நடத்தியது. இந்நிகழ்ச்சியில் அரசுத் துறைகள், தொழில் துறை, கல்வி, நுகர்வோர் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் ஆகிய துறைகளைச் சேர்ந்த 180-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டு பயனுள்ள பரிந்துரைகளையும் கருத்துக்களையும் எடுத்துரைத்தனர்.
நிகழ்ச்சியில், இந்திய தர நிர்ணய அமைவனத்தின் கோயம்புத்தூர் கிளை அலுவலக தலைவரும், விஞ்ஞானியுமான திருமதி ஜி.பவானி தலைமை விருந்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர்களை வரவேற்றார். அப்போது பேசிய அவர், பொது பேருந்து போக்குவரத்தில் நாள்தோறும் பயணம் செய்யும் பொது மக்களுக்கு இந்திய தர நிலையின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். அத்துடன் நுகர்வோர் பாதுகாப்பை உறுதி செய்யும் பாதுகாப்பான மற்றும் நீடித்த தர நிலைகளை உருவாக்கும் இந்திய தர நிர்ணய அமைவனத்தின் (பிஐஎஸ்) அர்ப்பணிப்பையும் உறுதிபடுத்தினார்.
---
SS/IR/KPG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2162669)
வருகையாளர் எண்ணிக்கை : 12