தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

120-க்கும் மேற்பட்ட எதிர்கால திட்டங்களுக்கு தொலைத்தொடர்பு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியை தொலைத்தொடர்புத்துறை முதலீடு செய்துள்ளது : மத்திய அமைச்சர் திரு சிந்தியா

Posted On: 29 AUG 2025 3:11PM by PIB Chennai

வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்குகளை எட்டுவதில் இளைஞர்கள் பங்கேற்க வேண்டும் என்று மத்திய தகவல் தொடர்பு மற்றும் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத்துறை திரு ஜோதிராத்திய சிந்தியா கேட்டுக் கொண்டுள்ளார். புதுதில்லியில் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைபெற்ற தொழில்நுட்ப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், இந்தியாவில் பழம் பெருமையை பயன்படுத்தி உலக அரங்கில் அறிவுசார் மையமாக உருவெடுக்கச் செய்ய வேண்டும் என்று கூறினார். ஆரியபட்டா முதல் நவீன மருத்துவ அறிவியல், அறுவைச் சிகிச்சை முதல் நாலந்தா வரை மற்றும் தக்சசீலம் போன்ற அனைத்து அறிவாற்றலில் சிறந்து விளங்கிய நாடாக இந்தியா இருந்து வந்துள்ளது. ஹார்டுவேர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள மிகப் பெரிய நூலகம் நாலந்தா பல்கலைக்கழகத்துடன் ஒப்பிடும் வகையில் அமைந்துள்ளது.

தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் நடத்தப்படும் இது போன்ற நிகழ்ச்சிகள் மிகத் துணிச்சலான கனவுகளுக்குத் தொடக்கமாக அமைய வேண்டும் என்றும் இளைஞர்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கான பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள முன்வர வேண்டும் என்றும் அவர் கூறினார்.  

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2161823

------

AD/SV/KPG/KR/DL


(Release ID: 2162000) Visitor Counter : 7
Read this release in: English , Urdu , Hindi