மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் உள்கட்டமைப்பு விரிவாக்க பணிகளுக்காக 385.27 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கு மத்திய கல்வி அமைச்சகம் ஒப்புதல்

Posted On: 29 AUG 2025 4:54PM by PIB Chennai

திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு வசதிகளை விரிவாக்கம் செய்வதற்காக உயர்கல்வி நிதிய முகமை  மூலம் 385.27 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய கல்வி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

அனுமதி வழங்கப்பட்ட நிதியின் மூலம் மத்தியப் பல்கலைக்கழக வளாகத்தில் புதிய வகுப்புகளுக்கான கட்டடம் மற்றும் குடியிருப்பு வசதிகள் உட்பட நவீன கல்வி வளாகம், கூடுதல் மாணவர் விடுதிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கான வசதிகள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனப் பணியாளர்களுக்கான குடியிருப்பு வசதிகள் கட்டப்பட உள்ளன. பிரத்யேக அறிவியல் உபகரணம் மையம் மேம்பட்ட ஆராய்ச்சிப் பணிகளுக்காக அதிநவீன உபகரணங்களுடன் அமைக்கப்பட உள்ளது.

உயர்கல்விக்கான  நிதி முகமை இந்தத் திட்டத்திற்கு மத்திய கல்வி அமைச்சகத்தின் மாநில திட்டங்கள் மூலம் நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதன்படி, பின்வரும் திட்டங்களுக்காக இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

  1. 96.40 கோடி ரூபாய் செலவில் கல்வி பிரிவுக்கான புதிய கட்டடம்
  2. 46.63 கோடி ரூபாய் மதிப்பிலான 300 படுக்கை  வசதிகளுடன் கூடிய மாணவிகள் தங்கும் விடுதி.
  3. 46.91 கோடி ரூபாய் செலவில் 300 படுக்கை வசதிகளுடன் கூடிய மாணவர் தங்கும் விடுதி.
  4. 19.95 கோடி  ரூபாய் செலவில் அறிவியல் உபகரண மையம்
  5. 16.84 கோடி ரூபாய் செலவில் அறிவியல் உபகரணங்கள் கொள்முதல்.
  6. 46.16 கோடி ரூபாய் செலவில் நிர்வாகக் கட்டத்திற்கான விரிவாக்கப் பணிகள்.
  7. 62.97 கோடி ரூபாய் செலவில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான (அனைத்து வகையான) குடியிருப்பு வசதிகள்.
  8. 42.60 கோடி ரூபாய் மதிப்பில் 400 படுக்கை வசதிகளுடன் கூடிய ஆராய்ச்சி மாணவர்களுக்கான தங்கும் விடுதி.

இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த முதலீடுகள் பல்கலைக்கழகத்தில் கல்வி பயில்வதற்கான சூழலை மேம்படுத்துவதுடன் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு குடியிருப்பு வசதிகளை பெருமளவில் மேம்படுத்தும். மேலும் நவீன உபகரணங்களுடன் கூடிய ஆய்வகங்கள், தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின்  வளர்ந்து வரும் கல்வி சார்ந்த தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் முழுமையான வசதிகள் மேம்படுத்தப்படும். இதற்கு தேசிய உயர்கல்வி மேம்பாட்டுத்துறை முழு ஆதரவு வழங்குகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2161875

***

AD/SV/KPG/KR/DL


(Release ID: 2161972) Visitor Counter : 27
Read this release in: English , Urdu , Hindi