அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

நாட்டின் உயிரிப் பொருளாதாரம் 2030-ம் ஆண்டுக்குள் 300 பில்லியன் டாலரை எட்டும் - மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 27 AUG 2025 5:16PM by PIB Chennai

பொருளாதாரம், சுற்றுச்சூழல், வேலைவாய்ப்புக்கான உயிரி தொழில்நுட்பக் கொள்கை (பயோ இ-3) அறிவிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைவதைக் குறிக்கும் வகையில், மத்திய அறிவியல் - தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங், இளைஞர்களுக்கான பயோ இ-3 தேசியக் கட்டமைப்பைத் தொடங்கி வைத்தார். இந்தியாவின் பொருளாதாரம், சுற்றுச்சூழல், வேலைவாய்ப்பு ஆகியவற்றை விரைவுபடுத்தும் உயிரி தொழில்நுட்பத்தை மாற்றுவதற்கான ஒரு படியாக இது கருதப்படுகிறது.

 

2014-ல் வெறும் 10 பில்லியன் டாலராக இருந்த இந்தியாவின் உயிரிப் பொருளாதாரம்  2024-ல் 165.7 பில்லியன் டாலராக வளர்ந்துள்ளது என அவர் தெரிவித்தார். 2030-ம் ஆண்டுக்குள் 300 பில்லியன் டாலர் என்ற இலக்கை நோக்கி செயல்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார். பயோஇ-3 கொள்கையின் கீழ் இந்தியாவின் உயிரி தொழில்நுட்பத் துறை கடந்த ஆண்டில் விரைவான முன்னேற்றங்களை அடைந்துள்ளது என அவர் குறிப்பிட்டார். நாட்டின் உயிரிப் பொருளாதாரம் பல முக்கிய மைல்கற்களை அடைந்துள்ளது என்று அவர் கூறினார்.

 

மொஹாலியில் இந்தியாவின் முதல் உயிரி உற்பத்தி நிறுவனம் திறப்பு, நாடு முழுவதும் உயிரி-செயற்கை நுண்ணறிவு மையங்கள், உயிரி உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டிருப்பது ஆகியவற்றை அமைச்சர் எடுத்துரைத்தார்.

 

இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, டாக்டர் ஜிதேந்திர சிங் இளைஞர்களுக்கான பயோஇ-3 போட்டியையும் தொடங்கி வைத்தார். இது நுண்ணுயிரிகள், மூலக்கூறுகள் தொடர்பான கருப்பொருளின் கீழ் இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கான நாடு தழுவிய போட்டியாகும். இந்தப் போட்டி  அக்டோபர் 2025 முதல் ஒவ்வொரு மாதமும் முதல் தேதி அறிவிக்கப்படும், இதில் வெற்றிபெறும் முதல் 10 பேருக்கு தலா 1 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும், அங்கீகாரம் மற்றும் வழிகாட்டுதல் ஆதரவும் வழங்கப்படும்.

*****

 

(Release ID: 2161247)

AD/SMB/PLM/DL


(Release ID: 2161341)
Read this release in: English , Urdu , Hindi