பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆர்டிஐ பத்திரிகையின் அண்மைப் பதிப்பை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் வெளியிட்டார்

Posted On: 26 AUG 2025 5:16PM by PIB Chennai

ஆர்டிஐ (தகவல் அறியும் உரிமை) பத்திரிகையின் அண்மைப் பதிப்பை மத்திய அறிவியல், தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு), பிரதமர் அலுவலகத்துறை இணையமைச்சர்  டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று (26.08.2025) புதுதில்லியில் வெளியிட்டார். மேலும் இந்திய தேசிய தகவல் ஆணையர்கள் கூட்டமைப்பின் இணைய தளத்தில் இ-பத்திரிகை ஒன்றையும் அவர் வெளியிட்டார்.

புதுதில்லியில்  உள்ள மத்திய தகவல் ஆணைய அலுவலகத்தில் இந்திய தேசிய தகவல் ஆணையர்கள் கூட்டமைப்பின் 15-வது வருடாந்தர பொதுக்குழு கூட்டத்தின் தொடக்க அமர்விலும் அமைச்சர் உரையாற்றினார்.

இந்தக் கூட்டத்தில் மத்திய தகவல் ஆணையத்தின் தலைமைத் தகவல் ஆணையர் திரு ஹீராலால் சமாரியா, மாநில தலைமைத் தகவல் ஆணையர்கள், நாடு முழுவதிலும் உள்ள தகவல் ஆணையர்கள் கலந்துகொண்டனர்.

கொவிட்-19 முழு முடக்க காலத்தில் கூட மத்திய தகவல் ஆணையமும், மாநில ஆணையங்களும் தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பான நேர்வுகளை சுமார் 100 சதவீதம் அளவுக்கு பைசல் செய்ததை அமைச்சர் பாராட்டினார். பெரும்பாலான அரசு உத்தரவுகளும், முடிவுகளும் ஏற்கனவே அதிகாரப்பூர்வ இணைய தளங்களில் வெளியிடப்பட்டிருப்பதால் தகவல் அறியும் உரிமை தொடர்பான கோரிக்கைகள் குறைந்துள்ளதாக அவர் கூறினார். மீண்டும் மீண்டும் கேட்கப்படும் தகவல்களை தவிர்க்க விதிமுறைகளை வலுப்படுத்துவது அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.

ஒத்துழைப்பு, பரஸ்பர கலந்துரையாடல், தகவல் ஆணையர்களிடையே சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்ளுதல் ஆகியவற்றிற்கு ஒரு தளமாக இந்திய தேசிய தகவல் ஆணையர்கள் கூட்டமைப்பு உருவாகியிருப்பதை டாக்டர் ஜிதேந்திர சிங் பாராட்டினார். தகவல் ஆணையர்கள் தங்களின் பதவிக்காலத்தில் எதிர்காலத்திற்கு தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றும் இந்தக் கருத்துக்கள் உரிய நேரத்தில் அமலாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2160904

***

AD/SMB/AG/DL


(Release ID: 2160986)
Read this release in: English , Urdu , Hindi