மத்திய பணியாளர் தேர்வாணையம்
மத்திய அரசின் பல்வேறு பணிகளுக்கு மத்திய குடிமைப் பணியாளர் தேர்வாணைம் விண்ணப்பங்களை வரவேற்கிறது
प्रविष्टि तिथि:
26 AUG 2025 5:28PM by PIB Chennai
மத்திய அரசின் பல்வேறு பணிகளுக்கு நேரடி சேர்க்கை குறித்த அறிவிப்பை மத்திய குடிமைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறையில் சட்டப்பிரிவுகளில் காலியாக உள்ள 44 பணியிடங்களை நிரப்புவதற்கும் லடாக் யூனியன் பிரதேச நிர்வாகத்தில் பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர் பணிக்கு காலியாக உள்ள 40 பணியிடங்களை நிரப்புவதற்கும் தகுதி உடையவர்களிடமிருந்து மத்திய குடிமைப் பணியாளர் தேர்வாணையம் விண்ணப்பங்களை வரவேற்கிறது.
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://upsconline.gov.in/ora/ என்ற இணையப் பக்கத்தின் மூலம் 2025 ஆகஸ்ட் 23 முதல் செப்டம்பர் 11 வரை விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2160918
---
AD/IR/KPG/DL
(रिलीज़ आईडी: 2160971)
आगंतुक पटल : 19