தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தமிழ்நாட்டில் மதுரை மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வலையமைப்பு தரம் குறித்து இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஆய்வு செய்தது

Posted On: 21 AUG 2025 2:41PM by PIB Chennai

தமிழ்நாட்டில் மதுரை மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வலையமைப்பு தரம் குறித்து 2025 ஜூலையில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) ஆய்வு செய்ததுஐதராபாத்தில் உள்ள டிராய் பிராந்திய அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ் நகர்ப்புற மண்டலங்கள், நிறுவனப் பகுதிகள் ஊரக குடியிருப்புகள் போன்ற பல்வேறு பயன்பாட்டு சூழல் மிக்க இடங்களில் நிகழும் மொபைல் வலையமைப்பு திறன் குறித்து அறிந்துகொள்வதற்கு இச்சோதனை நடத்தப்பட்டது.

டிராய் குழுக்கள் 2025 ஜூலை 17 முதல் ஜூலை 20 வரை 454.6 கி.மீ. தொலைவிற்கு நகரங்களிலும், 4.2 கி.மீ. தொலைவிற்கு நடைப்பயணம் வாயிலாகவும் மற்றும் 7 முக்கிய இடங்களிலும் விரிவான சோதனைகளை நடத்தியது. 2-ஜி, 3-ஜி,4-ஜி மற்றும் 5-ஜி உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் மதிப்பீடு செய்யப்பட்டது. இது பல்வேறு வகையான மொபைல் திறன்களில் பயனர்களின் சேவை அனுபவத்தை பிரதிபலிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்   https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2158996  

***

SS/IR/AG/KR


(Release ID: 2159073)
Read this release in: English , Urdu , Hindi