தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
வேளாண் மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கான ஜூலை மாத அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டெண் வெளியீடு
Posted On:
21 AUG 2025 11:32AM by PIB Chennai
வேளாண் தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டெண் கடந்த ஜூலை மாதத்தில் 1.23 புள்ளிகள் அதிகரித்து 135.31 ஆக உள்ளது. மேலும் கிராமப்புற தொழிலாளர்களுக்கான குறியீடு 1.30 புள்ளிகள் அதிகரித்து 135.66 ஆக உள்ளது.
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழிலாளர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேளாண் மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீடுகள் 2019-ம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 34 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 787 கிராமங்களிலிருந்து பெறப்பட்ட மாதிரி தரவுகளின் அடிப்படையில் இந்தக் குறியீட கணக்கிடப்பட்டுள்ளது.
உணவுப் பொருட்களுக்கான குறியீட்டில் 1.94 புள்ளிகள் வேளாண் தொழிலாளர்களுக்கும் 2.16 புள்ளிகள் கிராமப்புற தொழிலாளர்களுக்கும் கணக்கிடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.
தமிழ்நாட்டில் விவசாயத் தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக்குறியீட்டெண் கடந்த ஜூன் மாதத்தில் 133.27 என்ற புள்ளியிலிருந்து ஜூலை மாதத்தில் 131.68 ஆகவும், கிராமப்புறத் தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக்குறியீட்டெண் ஜூன் மாதம் 132.63 புள்ளியிலிருந்து ஜூலை மாதத்தில் 131.12 ஆக குறைந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2158878
----
AD/SV/KPG/KR
(Release ID: 2159051)