அணுசக்தி அமைச்சகம்
அணுக்கழிவு மேலாண்மை முறைகள்
Posted On:
20 AUG 2025 4:23PM by PIB Chennai
தற்போது நடைமுறையில் உள்ள கழிவு மேலாண்மை நடைமுறைகளின்படி வரும் 2047-ம் ஆண்டு 100 ஜிகாவாட் மின் உற்பத்தித் திறனை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன. இதன்படி அணுமின் நிலையங்களில் உருவாகும் அணுக்கழிவுகள் மற்றும் எரிபொருள் சுழற்சி வசதிகளை பாதுகாப்பான முறையில அகற்றுவதற்கும் அவை தொடர்பான நடவடிக்கைகளை நிர்வகிப்பதற்கு ஏதுவாக அணு எரிசக்தி சட்டம் 1962 மற்றும் அணுஎரிசக்தி கதிர்வீச்சுக் கழிவுகளைப் பாதுகாப்பாக வெளியேற்றுவது தொடர்பான விதிமுறைகள் 1987-ன்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கழிவு மேலாண்மையின் ஒரு பகுதியாக எந்தவொரு திடக்கழிவுகளையும் சுற்றுச் சூழலுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் அகற்றுவதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
விரிவான கதிர்வீச்சு மேலாண்மையின்படி, அணுமின் நிலையங்களில் உருவாகும் கதிர்வீச்சுத் தன்மை கொண்ட கழிவுகளை அதன் செயல்பாடுகளின்படி, அந்தந்த அணுமின் நிலையங்களிலேயே அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்தகைய கழிவுகள் திடக்கழிவுகளாக மாற்றப்பட்டு கான்கிரீட்டுகள் மூலம் கட்டப்பட்ட பாதுகாப்பான தன்மை கொண்ட இடங்களில் கொண்டு செல்லப்பட்டு அகற்றப்படுகிறது.
இத்தகவலை மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2158387
***
AD/SV/KPG/DL
(Release ID: 2158609)