பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பழங்குடியின கிராமங்களில் முழுமையான வளர்ச்சியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ள திட்டத்தின் வழியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருங்கிணைப்பு மாதிரி மற்றும் பலதுறை செயல்பாடுகள்

Posted On: 20 AUG 2025 1:12PM by PIB Chennai

திருமதி ரமிலாபென் பெச்சர்பாய் பாராவின் நட்சத்திரக் குறியிடப்படாத கேள்விக்கு பதிலளித்த மத்திய பழங்குடியினர் விவகாரத்துறை இணையமைச்சர் திரு துர்காதாஸ் உய்கி இன்று மாநிலங்களவையில், பழங்குடியின கிராமங்களில் முழுமையான வளர்ச்சியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ள தர்தி ஆபா ஜன்சாதிய கிராம் உத்கர்ஷ் திட்டம் (DAJGUA) பழங்குடியினர் பகுதிகளில் உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சியை இயக்குவதற்கான ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியாகும் என்று தெரிவித்தார். இந்த அபியான் 17 துறை அமைச்சகங்களால் செயல்படுத்தப்படும் 25 செயல்பாடுகளைக் கொண்டுள்ளது மற்றும் 63,843 கிராமங்களில் உள்கட்டமைப்பு இடைவெளிகளை நிரப்புதல், சுகாதாரம், கல்வி, வீட்டுவசதி, மின்மயமாக்கல், தொலைத்தொடர்பு மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளை வழங்குதல் ஆகியவற்றை 5 ஆண்டுகளில் 30 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் 549 மாவட்டங்கள் மற்றும் 2,911 தொகுதிகளில் 5 கோடிக்கும் மேற்பட்ட பழங்குடியினருக்கு பயனளிக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.

பழங்குடி கிராமங்களின் டிஜிட்டல் உள்ளடக்கம் மற்றும் மின்மயமாக்கலை ஊக்குவிப்பதற்காக, மூன்று அமைச்சகங்களின் பின்வரும் திட்டங்கள் 'தர்தி ஆபா ஜன்ஜாதிய கிராம் உத்கர்ஷ் திட்டத்தின்’ கீழ் சேர்க்கப்பட்டுள்ளன:

 

வரிசை எண்

செயல்படுத்தும் நிறுவனம்

திட்டத்தின் பெயர்

1

 

மின்சார அமைச்சகம்

 

வீட்டு மின்மயமாக்கல் (புதுப்பிக்கப்பட்ட விநியோகத் துறை திட்டம்)

2

 

புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

சுய சார்பு இணைப்பு, சூரிய மின் திட்டம்

3

தகவல் தொடர்புத் துறை (தகவல் தொடர்பு அமைச்சகம்)

4G / 5G நெட்வொர்க் - உலகளாவிய சேவை பொறுப்பு நிதி

(b): 'தர்தி ஆபா ஜன்ஜாதிய கிராம் உத்கர்ஷ் திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் பல துறை செயல்பாடுகளின் விவரங்கள் பின்வருமாறு:-

வரிசை எண்

அமைச்சகத்தின் பெயர்

திட்ட செயல்பாடுகளின் பெயர்

1

கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம்

பிரதமர் வீட்டு வசதி திட்டம் -கிராமப்புறம்

2

பிரதமர் ஊரக சாலைகள் திட்டம்

3

ஜல் சக்தி அமைச்சகம்

ஜல் ஜீவன் மிஷன்

4

மின்சார அமைச்சகம்

வீட்டு மின்மயமாக்கல்- (புதுப்பிக்கப்பட்ட விநியோகத் துறை திட்டம்)

5

புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

சுய சார்பு இணைப்பு, சூரிய மின் திட்டம்

6

சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்

பிரதமர் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு மிஷன்

7

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

அங்கன்வாடி மையம்- போஷன் 2.0

8

பள்ளிக் கல்வி & எழுத்தறிவுத் துறை - கல்வி அமைச்சகம்

தேசிய கல்வி இயக்கம்

9

ஆயுஷ் அமைச்சகம்

தேசிய ஆயுஷ் இயக்கம்

10

தொலைத்தொடர்பு அமைச்சகம்

4G / 5G நெட்வொர்க் - உலகளாவிய சேவை பொறுப்பு நிதி

11

சுற்றுலா அமைச்சகம்

பொறுப்பான சுற்றுலா (ஸ்வதேஷ் தர்ஷன்)

12

திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம்

மக்கள் பயிற்சி மையத் திட்டம்

 

13

வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம்

விவசாய தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்

14

மீன்வளத் துறை

பிரதமர் மீன் வள மேம்பாட்டுத் திட்டம்

15

கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை

தேசிய கால்நடை இயக்கம்

 

16

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்

திறன் மேம்பாடு-தேசிய கிராம சுயாட்சித் திட்டம்

17

பழங்குடியினர் விவகார அமைச்சகம்

பிரதமரின் ஆதி ஆதர்ஷ் கிராம திட்டம் / சேவை மைய முகமைகள்

 

தர்தி ஆபா ஜன்ஜாதிய கிராம் உத்கர்ஷ் திட்டம் பழங்குடி மக்கள் மற்றும் கிராமங்களுக்கு பல துறை வளர்ச்சியைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

(c): தர்தி ஆபா ஜன்ஜாதிய கிராம் உத்கர்ஷ் திட்டத்தின் கீழ், நாட்டில் பழங்குடி மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்வதற்காக தேசிய கல்வி இயக்கம் 1000 குடியிருப்பு விடுதிகளைக் கட்டுவதற்கான திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

***

(Release ID: 2158296)

AD/SM/DL


(Release ID: 2158554)
Read this release in: English , Urdu , Hindi