புவி அறிவியல் அமைச்சகம்
பருவநிலை தொடர்பான முன்னறிவிப்புகளை வழங்கும் வானிலை ஆய்வு மையத்தின் செயல்பாடுகள்
Posted On:
20 AUG 2025 4:36PM by PIB Chennai
2025-ம் ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை குறித்த நீண்டகால கணிப்புகளை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு வருகிறது. ஆண்டுதோறும் இந்திய வானிலை ஆய்வு மையத்தால் நீண்டகால வானிலை அறிக்கைகள் பருவமழைக் காலங்களில் (ஜூன் முதல் செப்டம்பர் வரை) இரண்டு கட்டங்களாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெளியிடப்படுகிறது. இதன்படி, இந்த ஆண்டிற்கான தென்மேற்கு பருவமழை இயல்பான அளவில் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான இரண்டு வானிலை அறிக்கைகளும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இந்திய வானிலை ஆய்வு மையம் நாடு முழுவதிலும் உள்ள 36 துணை வானிலை ஆய்வு மையங்கள் மூலம் அவ்வப்போது பெய்யும் மழை குறித்த கணிப்புகளையும் வெளியிட்டு வருகிறது. பருவமழைக் காலத்தில் அதாவது ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில், ஒவ்வொரு பகுதியிலும் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் குறித்த அறிக்கைகளையும் வழங்கி வருகிறது. மத்திய நீர் ஆணையம், மாநில அரசுகளால் அடையாளம் காணப்பட்டுள்ள பகுதிகளில் 24 மணி நேரத்திற்கு முன்னதாக வெள்ளப்பெருக்கு குறித்த குறுகியகால முன்னெச்சரிக்கை தகவல்களையும் வெளியிட்டு வருகிறது. பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் எதிர்மறை தாக்கங்களிலிருந்து நாட்டைப் பாதுகாக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
இத்தகவலை மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2158405
***
AD/SV/KPG/DL
(Release ID: 2158546)