கலாசாரத்துறை அமைச்சகம்
ராஜா ராம் மோகன் ராய் நூலக அறக்கட்டளை மூலம் தேர்ந்தெடுக்கப்படும் பொது நூலகங்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது
இடுகை இடப்பட்ட நாள்:
18 AUG 2025 4:12PM by PIB Chennai
கொல்கத்தாவில் உள்ள ராஜா ராம் மோகன் ராய் நூலக அறக்கட்டளை என்ற தன்னாட்சி அமைப்பு மூலம் நாடு முழுவதும் உள்ள பொது நூலகங்களின் மேம்பாட்டிற்கு மத்திய கலாச்சார அமைச்சகம் நிதியுதவி வழங்குகிறது. இந்தத் திட்டங்கள் மூலம் நூலகங்களை வளப்படுத்துதல், அறைகலன்களை கொள்முதல் செய்தல், நூலக கட்டிடங்களை கட்டுதல், மாற்றுத்திறனாளி வாசகர்களுக்கான வசதிகளை உருவாக்குதல் மற்றும் கணினிகள், அச்சுப்பொறிகள் மற்றும் தொடர்புடைய உள்கட்டமைப்புகள் மூலம் நூலக சேவைகளை நவீனமயமாக்குதல் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
சம்பந்தப்பட்ட மாநில மற்றும் யூனியன் பிரதேச நூலக ஆணையத்தின் பரிந்துரையின் மூலம் தகுதி வாய்ந்த நூலகங்கள் தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் கடந்த 2014-15-ம் நிதியாண்டில் 4571 நூலகங்களுக்கும், 2015-16-ம் நிதியாண்டில் 2303 நூலகங்களுக்கும், 2016-17-ம் நிதியாண்டில் 4534 நூலகங்களுக்கும், 2017-18-ம் நிதியாண்டில் 5207 நூலகங்களுக்கும், 2018-19-ம் நிதியாண்டில் 1062 நூலகங்களுக்கும், 2019-20-ம் நிதியாண்டில் 1651 நூலகங்களுக்கும், 2020-21-ம் நிதியாண்டில் 1126 நூலகங்களுக்கும், 2021-22-ம் நிதியாண்டில் 7 நூலகங்களுக்கும், 2022-23-ம் நிதியாண்டில் 7 நூலகங்களுக்கும், 2023-24-ம் நிதியாண்டில் 1071 நூலகங்களுக்கும், 2024-25-ம் நிதியாண்டில் 2 நூலகங்களுக்கும் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இன்று மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2157477
***
SS/IR/AG/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2157622)
வருகையாளர் எண்ணிக்கை : 19