இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
ஃபிட் இந்தியா இயக்கத்தை வலுப்படுத்த அனைவரும் பங்களிப்பதோடு ஃபிட் இந்தியா மொபைல் செயலியை அனைவரும் பதிவிறக்கம் செய்ய வேண்டும் - மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா
Posted On:
17 AUG 2025 6:09PM by PIB Chennai
குஜராத் மாநிலம் பாலிதானாவில் உள்ள தமது சொந்த கிராமமான ஹனோலில், ஃபிட் இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமைகளில் மிதிவண்டி ஓட்டுதல் நிகழ்வில் மத்திய விளையாட்டுத் திறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா இன்று (17.08.2025) பங்கேற்றார். மிதிவண்டி ஓட்டி, மக்கள் அனைவரும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையைப் பின்பற்றுமாறு அமைச்சர் கேட்டுக் கொண்டார். மக்கள் ஃபிட் இந்தியா மொபைல் செயலியைப் பதிவிறக்கம் செய்து கார்பன் கிரெடிட் அம்சத்தைப் பயன்படுத்துமாறு அமைச்சர் வலியுறுத்தினார். உடல் ஆரோக்கியத்தைக் கண்காணிக்க பயனுள்ள பிற அம்சங்களுடன் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். மிதிவண்டி ஓட்டுதல் உடல் பருமனை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு சிறந்த கருவியாகும் எனவுத் இது காற்று மாசுபாட்டிற்கு ஒரு தீர்வாகவும் உள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார். அனைவரும் ஃபிட் இந்தியா ஞாயிற்றுக்கிழமைகளில் மிதிவண்டி ஓட்டுதல் இயக்கத்தில் பங்கேற்குமாறு திரு மன்சுக் மண்டவியா கேட்டுக் கொண்டார்.
தில்லியில், இன்று நடைபெற்ற நிகழ்வில் 1200-க்கும் மேற்பட்ட மிதிவண்டி ஓட்டுநர்கள் பங்கேற்றனர். 2024 டிசம்பரில் தொடங்கப்பட்ட இந்த ஞாயிற்றுக்கிழமைகளில் மிதிவண்டி ஓட்டுதல் இயக்கம், இப்போதுவரை 46,000-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்றுள்ளது. இதில் மொத்தம் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தனிநபர்கள் பங்கேற்றுள்ளனர். ஆரோக்கியமான, மாசில்லாத இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 5000 இடங்களில் 'ஃபிட் இந்தியா சண்டேஸ் ஆன் சைக்கிள்' எனப்படும் ஞாயிற்றுக் கிழமைகளில் மிதிவண்டி ஓட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
***
(Release ID: 2157301)
AD/PLM/RJ
(Release ID: 2157329)