பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இத்தாலியின் நேபிள்ஸ் துறைமுகப் பயணத்தை நிறைவு செய்தது ஐஎன்எஸ் தமால்

Posted On: 17 AUG 2025 1:22PM by PIB Chennai

இந்திய கடற்படையின் போர்க்கப்பலான ஐஎன்எஸ் தமால் 2025 ஆகஸ்ட் 13 முதல் 16 வரை இத்தாலியின் நேபிள்ஸ் துறைமுகத்தில் முகாமிட்டு இருந்தது. இந்தப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவுகளை எடுத்துக் காட்டுவதாக அமைந்தது.

நேபிள்ஸ் துறைமுக பயணத்தின்போது ஐஎன்எஸ் தமால் ஒரு கூட்டுப் பயிற்சியில் பங்கேற்றது. இதில் தகவல்தொடர்பு பயிற்சிகள், கடல்சார் போர் உத்திகள், பறக்கும் பயிற்சிகள் போன்ற அம்சங்கள் இடம்பெற்றன.

நேபிள்ஸில் துறைமுக சந்திப்பின் போது, இந்தியா - இத்தாலி கடற்படைகளின் உயரதிகாரிகளுடனான இருதரப்பு கலந்துரையாடல்களும் தொழில்முறை பரிமாற்றங்களும் இடம்பெற்றன.

ஐஎன்எஸ் தமால், ரோமில் உள்ள இந்திய தூதரகம், இத்தாலிய கடற்படை, இத்தாலியில் உள்ள ஐநா நிறுவனங்கள் ஆகியவை சார்பில் கலாச்சார நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இந்தியாவின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 2025 ஆகஸ்ட் 15 அன்று ஐஎன்எஸ் தமால் கப்பலில் ஒரு சம்பிரதாய அணிவகுப்பு நடத்தப்பட்டது. ரோமில் உள்ள இந்திய தூதரகத்தில் நடைபெற்ற இந்திய சுதந்திர தின கொண்டாட்டங்களிலும் கப்பலின் பணியாளர்கள் பங்கேற்றனர்.

ஐஎன்எஸ் தமால் நேபிள்ஸிலிருந்து புறப்பட்டுள்ள நிலையில், இக்கப்பல் இந்தியாவுக்கு வரும் வழியில் மற்ற சில ஐரோப்பிய, ஆசிய துறைமுகங்களுக்கு செல்லவுள்ளது. இந்தப் பயணங்கள் சம்பந்தப்பட்ட நாடுகளுடன் கடல்சார் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும்.

***

(Release ID: 2157270)

AD/PLM/RJ


(Release ID: 2157277)