புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புள்ளியியல் ஆலோசகர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் மீளாய்வுக் கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது

Posted On: 15 AUG 2025 9:02AM by PIB Chennai

புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் நேற்று புதுதில்லி விஞ்ஞான் பவனில் புள்ளியியல் ஆலோசகர்களுக்கான மூன்றாவது சுற்று விழிப்புணர்வு மற்றும் மீளாய்வுக் கூட்டத்தை நடத்தியதுநிறுவன ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் தரவு அடிப்படையிலான முடிவு எடுக்கும் சூழல்சார் அமைப்பை உருவாக்குதல் ஆகியவற்றுக்காக அமைச்சகம் எடுத்துவரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது.

துவக்க நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய திறன் கட்டமைப்பு ஆணையத்தின் முன்னாள் தலைவர் திரு அடில் ஜைனுல்பாய் தனது உரையில் நமது தரவு அமைப்புகளை உலகில் மிக உயரிய தரநிலை கொண்ட அமைப்பாக மாற்றும் வகையில் மேம்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தேசிய மெட்டா டேட்டா கட்டமைப்பு, ஹேக்கத்தான்கள், -சன்கியிகி போர்ட்டல் போன்ற முன்முயற்சிகள் குறிப்பிடத்தக்க அளவில் தரவை அணுகுதல் மற்றும் அவற்றின் தரத்தை மேம்படுத்தும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார். இவை அளவீடு செய்வதற்காக மட்டுமல்லாமல் இந்தியாவின் வளர்ச்சி கதையைத் துல்லியமாகவும் நேர்மையுடனும் புத்தாக்கத்துடனும் வடிவமைக்க புள்ளியியலுக்கு அதிகாரம் அளிக்கின்றது என திரு அடில் ஜைனுல்பாய் தெரிவித்தார்.

நித்தி ஆயோக் முதன்மைச் செயல் அலுவலர் திரு பி.வி.ஆர். சுப்பிரமண்யம் தனது உரையில்  புள்ளியியல் அமைச்சகம் வழங்குகின்ற அடிப்படைத் தரவுகளை அங்கீகரித்து அவை தேசத்தின் நிகழ்நேரப் பதிவை தருகின்றன என்றார். வர்த்தகக் கொள்கை தொடர்பான  பேச்சுவார்த்தைகள் போன்ற முக்கியமான நோக்கங்களுக்கு முற்றிலும் ஒருங்கிணைக்கப்பட்ட தரவு அமைப்புகள் தேவை என்பதை அவர் எடுத்துக்காட்டினார். பொருளாதாரப் புள்ளிவிவர குறிகாட்டிகளை மாதாந்திர அல்லது காலாண்டு அடிப்படையில் தொடர்ச்சியாக வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர் தரவு பயன்பாட்டை மேம்படுத்த இயந்திரக் கற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில் நுட்பங்களை  ஏற்று செயல்படுத்த வேண்டும் என்றும் ஊக்கப்படுத்தினார்.

மின்னணுவியல் மற்றும் தகவ்ல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் திரு எஸ்.கிருஷ்ணன் புள்ளியியல் அமைச்சகத்தின் வலுவான தரவு சேகரிப்பு அமைப்புகளைப் பாராட்டினார். அவை தனிநபர் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்கின்றன என்றும் தரவு கிடைத்தலுக்கும் தனிநபர் தனிப்பட்ட தரவுகள் பாதுகாக்கப்படுவதற்கும் இடையில் சமநிலையைப் பேணுவது இன்றைய தரவு அடிப்படையிலான பொருளாதாரத்தில் பெரும் சவாலாக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் செளரப் கார்க் தனது உரையில் புள்ளியியல் ஆலோசகர்கள் தரவை வைத்திருப்பவர்கள் மட்டும் அல்லர், மாறாக ஆதார அடிப்படையிலான ஆளுகையில் செயலூக்கமான பங்குதாரர்கள் என்று குறிப்பிட்டார்.

இந்தக் கூட்டத்தில் பல்வேறு மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் புள்ளியியல் ஆலோசகர்கள், மற்றும் புள்ளியியல் அமைச்சககத்தின் மூத்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

***

(Release ID: 2156677)

AD/TS/ RJ


(Release ID: 2156851)
Read this release in: English , Urdu , Hindi